Optical Illusions: ஆப்டிகல் இல்யூஷன் என்பது நம் கண்களையும் மூளையையும் ஏமாற்றி, யதார்த்தத்தை வேறு விதமாக காட்டும் ஒரு தந்திரமான விளையாட்டு. இந்த விளையாட்டுகள் நம் கற்பனைத் திறனைத் தூண்டி, படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளன. ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டுகள் நம் மூளையை நன்றாக வேலை செய்ய வைத்து, கவனத்தையும் செறிவையும் அதிகரிக்க உதவும். இது ஒரு வகையான மூளைப் பயிற்சி போன்றது.
மறைந்திருக்கும் பொருளை கண்டுபிடித்தல், இரண்டு படங்களில் உள்ள வேறுபாடுகளைக் கண்டறிதல் போன்ற பல்வேறு வகையான ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டுகள் நம் மூளையை நன்றாக வேலை செய்ய வைத்து, கவனத்தையும் செறிவையும் அதிகரிக்க உதவும்.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
பார்க்கிங் எண்கள் உள்ள கார்களின் புதிர்:
இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில், கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் துல்லியமான அடையாளத்திற்காக பார்க்கிங் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரு பார்க்கிங்கில், ஒவ்வொரு காரும் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்போது அனைத்து கார்களும் வெளியே சென்றுவிட்டன. ஒரே ஒரு சிவப்பு நிற கார் மட்டும் தனது பார்க்கிங் இடத்தின் எண்ணை மறைத்துக்கொண்டு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சிவப்பு கார் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் எந்த எண் இருக்கும்?
கொடுக்கப்பட்ட படத்தை கவனமாகப் பாருங்கள். ஒவ்வொரு காரின் எண்ணையும், சிவப்பு காரின் இருப்பிடத்தையும் கவனியுங்கள். படத்தில் உள்ள எண்களை வெவ்வேறு கோணங்களில் பார்க்க முயற்சி செய்யுங்கள். இந்த சவாலை வெல்ல உங்களுக்கு 10 விநாடிகள் மட்டுமே உள்ளன! 10… 9… 8… நேரம் ஓடுகிறது, மிஸ் செய்யாதீர்கள்! 😊
உங்களில் பலர் இந்த புதிரின் விடையை வெறும் 5 விநாடிகளில் கண்டுபிடித்திருப்பது உறுதி! இது உங்கள் மூளையின் கூர்மையை மற்றும் சிறந்த பகுத்தறிவு திறனை காட்டுகிறது.
புலி வேட்டை: 40 வினாடிகளில் 16 புலிகளைக் கண்டுபிடிக்க முடியுமா?
படத்தை பார்த்ததும் வரிசையாக 16, 06, 68, 88, 98 என எண்கள் தெரிகின்றன. இது ஒரு சீரற்ற தொடராக தோன்றலாம். எண்களை அப்படியே திருப்பி போடுங்கள். அதாவது சின்ன டிரிக்ஸ் தான். அப்படியே எண்களை எல்லாம் தலைகீழாக பாருங்கள். அதாவது படத்தில் உள்ள எண் வரிசையை:
விடை:
16 → 91
06 → 90
68 → 89
88 → 88
98 → 86
சிவப்பு நிற கார் 87 இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது! 🎉
இந்த சுவாரஸ்ய புதிர் உங்களின் மூளையின் சவாலை வெற்றி பெற்றதை உறுதிப்படுத்துகிறது! 😊