TamilSaaga

சொந்த மண்ணில் அடுக்குமாடி வீடு கட்டிய செந்தில், ராஜலட்சுமி ஜோடி.. சிங்கப்பூர் உள்பட வெளிநாடுகளில் குவிந்த கச்சேரிகளால் மெய்யான கனவு

இன்று உலகையே தனது படைப்புகளால் உற்சாகப்படுத்தி வருவது தான் சினிமா, இதை ஒரு மாய உலகம் என்றே கூறலாம். அப்படிப்பட்ட இந்த சினிமா தோன்ற வித்திட்டது கிராமிய கலைகளும், தெருக்கூத்துகளும் தான் என்றால் அது சற்றும் மிகையல்ல.

அந்த வகையில் அண்டை நாடான இந்தியாவை பொறுத்தவரை கிராமிய கலைகளுக்கும், கிராமிய கலைஞர்களுக்கும் எப்போதுமே மவுசு அதிகம். அழிவில் விளிம்பில் நிற்கும் பல கலைகளும், கலைஞர்களும் தற்போது பல்வேறு அமைப்புகளால் காக்கப்படும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி மூலமும் அதில் வரும் நிகழ்ச்சிகள் மூலமும் பிரபலமான நடிகர் நடிகைகள் மற்றும் கலைஞர்கள் என்று பலர் உண்டு. அதிலும் குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள பாடகர் படகிகளின் பட்டியல் மிகவும் பெரிது என்றே கூறலாம்.

சந்தானம் துவங்கி சிவகார்த்திகேயன் வரை இன்று பலர் வெள்ளித்திரையில் ஜோகிக்க, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று உலக அளவில் பிரபலமான ஒரு ஜோடி தான் செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி. இன்றைய தேதியில் இந்த ஜோடிக்கு உலக அரங்கில் நிச்சயம் அறிமுகம் தேவையில்லை என்றே கூறலாம்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 6வது சீசன் வந்தபோது அதில் இருவரும் கலந்துகொண்டு அசத்தினார்கள். பல கிராமத்து கலைஞர்கள், கிராமத்து இசை என்று அவர்கள் பங்கேற்ற அனைத்து நாட்களுக்கும் பல அருமையான நிகழ்வுகள் அந்த மேடையில் அரங்கேறியது. செந்தில் கணேஷ் தனது விடாமுயற்சியால் பைனல் வரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் அந்த போட்டியில் வென்று பரிசாக வீட்டையும் பெற்றார் அவர்.

இந்த சின்னத்திரை வெற்றிக்கு பிறகு இந்த ஜோடிக்கு கிடைத்த அடுத்த வெள்ளித்திரை வெற்றி தான் பிரபுதேவா நடிப்பில் வெளியாகி ஹிட்டான சார்லி சாப்ளின் படத்தில் வந்த என்ன மச்சான், சொல்லு புள்ள என்ற பாடல். பெரியவர் முதல் சிறியவர் வரை பட்டிதொட்டி என்று எங்கும் இந்த பாடல் பிரபலம். இந்த பாடலின் வெற்றிக்கு பிறகு இவர்களுக்கு ஏகப்பட்ட கச்சேரிகள் குவிந்தன.

அதிலும் குறிப்பாக நமது சிங்கப்பூருக்கு அடிக்கடி பல கச்சேரிகளுக்கு அவர்கள் வருவது உண்டு, பல வெளிநாடுகளில் பல மேடைகளில் பாடும் வாய்ப்பு இந்த ஜோடிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு அவர்களுடைய சொந்த ஊரில் அடுக்குமாடி வீடு ஒன்றை அவர்கள் கட்டினார்கள். உண்மையான உழைப்பு இருந்தால் எதுவும் சாத்தியமே என்பதையும் அவர்கள் நிரூபித்தார்கள்.

அதே போல பல பாடல்கள் மூலம் நம் மனம் கவர்ந்த இந்த ஜோடி கடந்த ஏப்ரல் 18ம் தேதி வெளியான ஒரு ஆல்பம் பாடல் மூலம் நடிகர்களாகவும் நம்மை மகிழ்வித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மணிமாறன் என்பவர் இசையமைக்க, ராஜலக்ஷ்மியின் வரிகளில் இந்த பாடல் வெளியானது. செந்தில் கணேஷ் ஏற்கனவே ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமிய கலைஞர்கள் மற்றும் கலை பற்றிய பெரிய அளவிலான புரிதல் இன்றைய இளைஞர்களிடம் இல்லாமல் இருந்த நிலையில், இந்த ஜோடிக்கு அதனை நிறைவு செய்துள்ளது என்று தான் கூறவேண்டும். இவர்களைப்போன்ற ஆயிரமாயிரம் கலைஞர்களின் குரலாய் ஒலிக்கும் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஆகியோரின் இந்த வளர்ச்சி உண்மையில் அசாத்தியமானதே.

திறமையும், பொறுமையும் இருந்தால் மட்டும் போதும் வெற்றி மகுடம் உங்களை தேடிவரும் என்பதற்கு இவர்கள் ஒரு எடுத்துக்காட்டு.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts