TamilSaaga

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் “பீஸ்ட்” – தளபதிக்கு இந்த படத்தில் மூன்று வில்லனா?

கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படங்களை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் அடுத்த திரைப்படம் தான் “பீஸ்ட்”. தளபதி விஜயன் பல வெற்றிப்படங்களை தொடர்ந்து தற்போது “பீஸ்ட்” படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது என்றால் அது மிகையல்ல. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் VTV கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு பணியை கவனித்து வருகின்றார்.

மிக சிறந்த கமர்சியல் படமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது சென்னையில் பல இடங்களில் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகின்றது. மேலும் மால் போன்ற செட் அமைத்து படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த படத்தில் மூன்று வில்லன்கள் உள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அந்த மூன்று வில்லன்களில் ஒருவராக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடித்து வருவதாகவும். மேலும் சவுத் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் பிரபுதேவா நடிக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஆனால் படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுகுறித்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்ஜியா நாட்டிற்கு பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பாக தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க தளபதி விஜய் சைக்கிளில் சென்றது பலரின் கவனத்தை ஈர்த்தது. மேலும் பெட்ரோல் மற்றும் விலைவாசி குறித்து சில சர்ச்சைகள் இதனால் எழுந்தது என்பது நினைவுகூரத்தக்கது.

Related posts