தமிழ் சினிமாவை ரசிகர்கள் அதிகளவில் தூக்கி கொண்டாடினாலும் சில சமயங்களில் சில குறிப்பிட்ட இயக்குனர்களின் படத்தின் மீது பொதுவான ஒரு கருத்தை வைப்பது வாடிக்கையாகி விட்டது. அதில் குறிப்பிடும்படியாக கூறினால் இயக்குனர் மிஷ்கின் திரைப்படங்கள்.
இவரின் படங்கள் பல நேரங்களில் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனர்கள் மத்தியிலும் பேசுப்பொருளாக மாறிவிடுகிறது. சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன் போன்ற படங்களை துக்கி கொண்டியவர்கள் தான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் சைக்கோ போன்ற படங்களை மோசமாக விமர்சித்தார்கள்.
மிஷ்கினின் சைக்கோ படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட போது, “ஹெல்மெட்டுடன் சேர்த்து உங்கள் மூளையையும் திரையரங்கு வாசலிலேயே கழற்றி வைத்து வாருங்கள்” என்று மிஷ்கின் கேட்டுக் கொண்டார். இதன் அர்த்தம் அவரின் ரசிகர்கள் நன்கு அறிவார்கள். பெரும்பாலும் ஹாலிவுட் படங்களில் லாஜிக் பார்க்காத நம்மூர் அறிவாளிள் மசாலா படங்களில் கூட லாஜிக் பார்த்தால்? இப்படியான பதில்களை தான் பெற நேரிடும்.
பெரும்பாலும் மிஷிகின் திரைப்படங்கள் நாவல்கள், புத்தகங்கள் சாயலில் இருக்கும். அந்த படைப்பை எடுக்க உரிமை உள்ளது. அதே போலேதான் படப்பை விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அந்த விமர்சனம் எப்படி பட்டதாக இருக்கிறது என்பது தான் இங்கு முக்கியம். 5 மொழிகளில் வெளியான நான் ஈ படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கோடிகளில் வசூல் சாதனை செய்தது. ஆனா லாஜிக் பார்த்தால் யாருமே நம்பமாட்டார்கள். ஈ வந்து பழி வாங்குகிறது வில்லனை. இது சாத்தியமா என்றால் இல்லை. ஆனால் அந்த படைப்பை இயக்குனர் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து புகழும் அடைந்தார்.
தமிழ் சினிமாவில் கடந்த பதினைந்து வருடங்களில் மூன்று இயக்குநர்களுக்கு மட்டுமே திரைப்பட விழா மேடைகளில் நிரந்தரமாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. பாலுமகேந்திரா, பாரதிராஜா, மகேந்திரன். இவர்களைவிட அதிக வணிக வெற்றிகளை குவித்த இயக்குநர்கள் பார்வையாளர்கள் வரிசையில் இருக்கையில் இந்த மூவர் மட்டும் மேடையின் நடுநாயகமாக அமர்த்தப்பட்டார்கள். இவர்களின் படைப்புகளில் இருக்கும் ஒற்றுமை யதார்த்தம். வாழ்க்கைப்பாடம், மனதில் ஏற்படுத்தும் தாக்கம்.
மிஷ்கின் இயக்கி பிசாசு படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்தது. இப்போது அதன் 2 பாகத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக்வெளியாகி விட்டது. வழக்கம் போல் சோஷியல் மீடியாவில் சினிமா விமர்சகர்கள் போஸ்டரை வைத்தே கதை சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
படைப்பாளிகள் எப்போதுமே விமர்சனத்தை எதிர்கொண்டு அடுத்தடுத்த நகரத் தொடங்கிவிடுவார்கள் அப்படிப்பட்டவர் தான் மிஷ்கின். அவரின் வாழ்க்கை லாஜிக்கும் படைப்பின் லாஜிக்கும் ஒன்றே. எதுவும் கடந்து போகும்..