TamilSaaga

சிங்கப்பூர்ல எந்த இடம் ரொம்ப Expensive மற்றும் எங்கு குறைவான விலை என ஓர் அலசல்!

உலக அரங்கில் சிங்கப்பூர் ஒரு வளர்ந்த நாடாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூருக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பொதுவாக மக்கள், அனைத்து வகையிலும் வளர்ந்த நாடுகளுக்கு செல்வது வழக்கம். இதன் காரணமாக, சிங்கப்பூருக்கு ஏராளமானோர் குடியேற விரும்புகின்றனர். சிங்கப்பூர் நாடு அனைத்து வகையிலும் நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கல்வி, தொழில், குடியேற்றம், பாதுகாப்பு போன்ற அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்த நாடாக இருப்பதால் சிங்கப்பூரை நோக்கி இந்த ஈர்ப்பு.
உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள மக்களும் தங்களுடைய நாடுகளை, நகரங்களை விட்டு வேறொரு நாட்டுக்கு செல்வதற்கு முக்கிய காரணம் தங்களுடைய குடும்பத்துடைய பொருளாதார மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் வளர்ச்சி அடையவே. அது மட்டும் இன்றி பாதுகாப்பு கருதியும், கல்வி கற்பதற்காகவும் பலர் வெளிநாடு செல்கின்றனர். சிங்கப்பூரை தவிர இன்னும் பல நாடுகளில் உள்ள சில நகரங்கள் இந்த தகுதியை பெற்றிருக்கிறது. இந்த பதிவில் நாம் சிங்கப்பூரில் இருக்கும் விலைவாசி அதிகமான மற்றும் குறைவான நகரங்களை பற்றி விரிவாக பார்க்கலாம். சிங்கப்பூருக்கு குடியேற வேண்டும் என்ற நினைப்பவர்களுக்கு இந்த பதிவு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

பொதுவாக, ஒவ்வொரு நாடும் தங்களுடைய குடிமக்களுக்கு சில சலுகைகள் அளிக்கும். அதுவே வெளிநாட்டிலிருந்து குடியேறுபவர்களுக்கு அத்தகைய சலுகைகள் பெற முடியாது. நீங்கள் வெளிநாட்டிலிருந்து ஒரு நாட்டுக்கு குடியேறுபவராக இருந்தால் அந்த நாட்டில் இருக்கும் சூழலுக்கும், விலைவாசிக்கும் ஒற்றுப் போக வேண்டும். இந்த பதிவில் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு குடியேறுபவர்களுக்கு எது சிறந்த இடம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Preply என்பது அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மொழி பயிற்சி நிறுவனம். அந்நிறுவனம் தற்போது ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு, உலகில் உள்ள அதிக விலைவாசி நகரங்களை மற்றும் குறைந்த விலைவாசி நகரங்களை பற்றி பேசும். இந்த ஆய்வு அறிக்கையின் படி எஸ்டோனியா நாட்டில் இருக்கும் Tallinn நகரம் முதலிடத்திலும், சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கும் Bern நகரம் இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூரில் இருக்கும் டோ பயோஹ் நகரம் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.

இது போன்ற ஆய்வுகளை நடத்தும்போது என்னென்ன காரணங்களை கருத்தில் கொண்டு தர வரிசை அளிக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம். வெளிநாட்டவர் சராசரியாக அந்த நகரத்தில் வசிப்பதற்கு ஆகவும் காஸ்ட் ஆப் லிவிங், டேக்ஸ் பிடித்தது போக பெறப்படும் வருமானம், சராசரியாக 50,000 டாலர்கள் அல்லது அதற்கும் குறைவான தொகையை டேக்ஸ் ஆக பெறுவது, அந்த நகரத்தின் இணைய வேகம் அதாவது இன்டர்நெட் ஸ்பீட், எவ்வளவு பார்வையாளர்கள் திரும்ப வருகிறார்கள், அந்த நகரத்தினுடைய பாதுகாப்பு, நகரத்தின் சுத்தம் மற்றும் சுகாதாரம், வேலை செய்யும் இடத்தில் மாத சம்பளம் மற்றும் செலவுகள், அந்த நகரத்தின் அதிகாரப்பூர் மொழியை கற்றுக்கொள்ள ஆகும் நேரம் ஆகிய இந்த பட்டியலை வைத்து நகரங்களின் தரவரிசையை நிர்ணயிக்கின்றனர்.

மேலே கொடுக்கப்பட்ட காரணிகளை வைத்து சிங்கப்பூரில் இருக்கும் அதிக விலைவாசி நகரங்களும் மற்றும் குறைவான விலைவாசி இடங்களை பட்டியலிடப்பட்டுள்ளது, அவை இதோ. முதலில் விலைவாசி அதிகம் உள்ள முதல் ஐந்து இடங்களை பார்ப்போம். Toa Payoh, Bukit Merah, Outram, Kallang, மற்றும் Geylang ஆகிய இடங்களாகும். அடுத்தது மிகக் குறைவான விலைவாசி உள்ள ஐந்து இடங்களை பார்க்கலாம். Ang Mo Kio, Sembawang, Yishun, Punggol, மற்றும் Choa Chu Kang ஆகியவை ஆகும்.
Toa Payoh, ஆய்வறிக்கையின் படி 91 சதவீதம் விலைவாசி அதிகம் உள்ள இடமாக கருதப்படுகிறது. விலைவாசி அதிகம் என்பதால், அங்கு விற்கப்படும் பொருட்கள், வீட்டு வாடகை, இதர கட்டணங்கள் அதிகமாக இருக்கும். வெளிநாட்டிலிருந்து இந்த இடத்திற்கு குடியேறுபவர்களின் குடும்ப வருமானம் 5500 SGD சராசரியாக இருக்கும். ஆனால் இந்த இடத்தில் வீட்டு வாடகை 5000 SGD இருக்க மீதி இருக்கும் 500 SGD வைத்து தங்களுடைய குடும்ப செலவை பார்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் Ang Mo Kio என்னும் இடத்தில் விலைவாசி 23 சதவீதமாக கருதப்படுகிறது. இந்த ஆய்வுகள் வெளிநாட்டிலிருந்து குடியேறுபவர்களுக்கு பொருந்தும். சிங்கப்பூர் குடிமக்களுக்கு இந்த சதவீதங்கள் பொருந்தாது.

சிங்கப்பூர், சுவிட்சர்லாந்தில் உள்ள பேசில் நகரத்துடன் இணைந்து வெளிநாட்டவர்க்கு சில சலுகைகளை அளிப்பதால் 2024 ஆம் ஆண்டில் மூன்றாவது பெரிய மற்றும் சிறந்த நாடாக வெளிநாட்டவர்களுக்கு திகழ்கிறது. வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் குடியேறுபவர்கள் சராசரி வருமானமாக கிட்டத்தட்ட 5000 SGD ஆக அறிவித்திருக்கிறது சிங்கப்பூர் அரசு. வெளிநாட்டவர்க்கு ஒரு குடும்பத்தின் மொத்த செலவு 4,000 SGD கருதப்படுவதால் இங்கு வசிப்பதற்கு நல்ல சூழ்நிலை அமைகிறது.

இது போன்ற பல நல்ல அம்சங்கள் சிங்கப்பூர் நாடு வெளிநாட்டவர்க்கு அறிவித்திருப்பதால் பலர் சிங்கப்பூருக்கு வந்து குடியேற வேண்டும் என்று விரும்புகின்றனர். குடியிருப்பது மட்டும் இன்றி சில காலம் தங்கி பணிபுரிய அல்லது படிக்க தகுந்த நாடாக சிங்கப்பூர் இருக்கிறது. ஆசிய கண்டத்தில் சிங்கப்பூர் என்பது ஒரு குறிப்பிடத்தக்க நாடாக திகழ்கிறது. நீங்கள் ஆசியாவில் இருக்கிறீர்கள் என்றால், இந்த 2024 ஆம் ஆண்டு ஒரு வெளிநாட்டிற்கு குடியேற விரும்புகிறீர்கள் என்றால் சிங்கப்பூர் என்பது ஒரு சிறந்த தேர்வாகும். எனவே, இந்த ஆண்டு உங்களுடைய வெளிநாட்டு குடியேற்ற கனவை நிறைவேற்ற சிங்கப்பூரே சிறந்த நாடு, வாங்க சிங்கப்பூருக்கு!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts