இப்படியொரு கண்றாவியான சிந்தனை இந்த 46 வயது நபருக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. உண்மையில் அருவருக்கத்தக்க ஒரு செயல் இது.
Singapore polytechnic-ல் உள்ள ஆண்கள் கழிப்பறைக்குள் நுழைந்த ஒருவர், அடுத்த கழிவறையில் இருந்தவர் என்ன செய்கிறார் என்பதை அறிய “ஆர்வத்துடன்” இருந்திருக்கிறார். ஆவல் அதிகமாக, அவரது தொலைபேசியில் பிரதிபலிப்பைப் பயன்படுத்தி பக்கத்து கழிவறையில் இருந்த நபரை பார்க்க முயன்றிருக்கிறார்.
பக்கத்து கழிவறையில் இருந்தவர் 20 வயதான இளைஞர். மொபைல் மூலம் தன்னை கவனிப்பதை அறிந்த அந்த இளைஞர் சற்றும் யோசிக்காமல் உடனே கூச்சலிட்டுள்ளார்.
இந்த மோசமான செயலில் ஈடுபட்டவரின் பெயர் ஆண்டனி சான் வெங் காங் (46). அவருக்கு இன்று (டிசம்பர் 21) S$5,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. .
ஆண்டனி சான் 9 Woodlands Avenue 9ல் உள்ள ரிபப்ளிக் பாலிடெக்னிக் மையத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிபவர். சம்பவத்தன்றும் அவர் பணியில் தான் இருந்திருக்கிறார். இதனை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சிங்கப்பூரில் PCM Permit-ல் வேலை வாய்ப்பு – படித்த, படிக்காத அனைவருக்கும் ஓர் அரிய வாய்ப்பு!
சான் கைது செய்யப்பட்ட போது, அவரது தொலைபேசி கைப்பற்றப்பட்டது. ஆனால் அவரது தொலைபேசியில் பாதிக்கப்பட்டவரின் படங்கள் அல்லது வீடியோ பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.
சான் தனது தொலைபேசியை ஒரு பதிவு சாதனமாகப் பயன்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை, அல்லது அவர் முன்கூட்டியே இதை திட்டமிட்டு செய்தார் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. தவிர, குற்றத்தைச் செய்யும் போது சான் பக்கத்து கழிவறைக்குள் அத்துமீறி நுழையவில்லை. இவையெல்லாம், வழக்கில் அவருக்கு சாதகமாக அமைந்துவிட்டது.