TamilSaaga

“சிங்கப்பூர் 786 SG நிறுவனத்தின் ஊழியர்”.. Google Driveவில் செய்த கோல்மால் – ஆதாரத்துடன் சிக்கியது எப்படி?

சிங்கப்பூரில் ஏற்கனவே வேலைபார்த்து வந்த நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்ததையடுத்து, ஒரு நாள் அறிவிப்புடன் வேலையை விட்டு நீக்கப்பட்ட நபர், அந்த நிறுவனத்தின் கூகுள் டிரைவ் கணக்கில் இருந்து 20 கோப்புகளை நீக்கிய வழக்கில் தற்போது தண்டனை பெற்றுள்ளார். 30 வயதான டான் வெய் சியாங்கிற்கு இன்று செவ்வாய்கிழமை (டிசம்பர் 7) நீதிமன்றத்தில் 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. கம்ப்யூட்டர் உள்ளடக்கங்களை அங்கீகரிக்காமல் மாற்றியமைத்தல் என்ற கணினி துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் அவர் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் மூதாட்டியை இரக்கமின்றி தாக்கிய பணிப்பெண்ணுக்கு சிறை”

டான் என்ற அந்த நபர் அல்ஜூனிட் தொழிற்பேட்டையில் உள்ள இறைச்சி உற்பத்தி நிறுவனமான 786 SG என்ற நிறுவனத்தின் அலுவலகத்தில் உற்பத்தி மேலாளராக பணிபுரிந்ததாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. உற்பத்தி அட்டவணையை திட்டமிடுதல் மற்றும் பொருட்களின் தரத்தை சரிபார்த்தல் ஆகியவை அவரது வேலையாக இருந்துவந்தது.

இந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி, அவர் அந்த நிறுவனத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். மற்றும் அவரது வேலை ஒப்பந்தத்தின் கீழ் தேவைப்படும் 30 நாள் அறிவிப்பு காலத்தை வழங்கவும் தொடங்கினார். இதனையடுத்து ஜனவரி 12 அன்று, அவரது நேரடி மேற்பார்வையாளர் டானிடம் “பணி நீக்கம்” செய்யப்பட்டதற்கான கடிதத்தை அளித்தார். அவருடைய ஒட்டுமொத்த “செயல் திறன்” மற்றும் நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத நிலையில் ஒரு நாள் முன் அறிவிப்புடன் அவரது வேலை நிறுத்தப்பட்டதாக அவருக்குத் தெரிவித்தார்.

இதனையடுத்து அந்த கடிதத்தின்படி, டான் தனது இறுதி சார்பு ஊதியத்தை ஜனவரி 2021 இறுதியில் பெற வேண்டும் மேலும் அவர் கையெழுத்திட்டு இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டார்.ஆகையால் அவரது மேற்பார்வையாளர் அவரிடம் உள்ள அனைத்து திட்டப்பணிகள், நிறுவனத்தின் உள்நுழைவு விவரங்கள் மற்றும் இதர அனைத்தையும் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் தகவல்களை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்நிலையில் அந்த நாளின் பிற்பகுதியில், அலுவலகத்தில் இருக்கும்போதே, நிறுவனத்தின் கூகுள் டிரைவ், கிளவுட் அடிப்படையிலான தரவு சேமிப்பக வசதியை அணுக, டான் தனது நிறுவனக் கணக்கைப் பயன்படுத்தினார். அதன் பிறகு நிறுவனத்துக்குச் சொந்தமான 20 ஆவணங்களை Bin-க்கு நகர்த்தி சில தொகுதிகளை நீக்கினார். அதன் பிறகு அந்த நிறுவன மேலாளர் அவருடைய அந்த செயலை கண்டறிந்து நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts