சிங்கப்பூரில் தனது காதலியுடன் உடலுறவு கொள்வதை ரகசியமாகப் படம் பிடித்தது உட்பட பல குற்றங்களைச் செய்த ஒரு முழுநேர தேசிய சேவையாளருக்கு இன்று திங்கள்கிழமை (நவம்பர் 8) நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும் GAG உத்தரவுகள் காரணமாக பெயரிட முடியாத அந்த 20 வயது இளைஞருக்கு 21 மாதங்கள் நன்னடத்தை வழங்கப்பட்டு 60 மணிநேரம் சமூக சேவை செய்ய அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் கருவிகள் மூலம் ஆபாசமான விடியோக்களை அனுப்பியது, ஒரு பெண்ணை அவமதித்தது மற்றும் அவர் அனுமதியின்றி அவருடைய அந்தரங்கத்தை பதிவு செய்தல் உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் எட்டு குற்றச்சாட்டுகள் தண்டனையின்போது பரிசீலிக்கப்பட்டன. குற்றவாளி முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் உறவில் இருந்ததாக நீதிமன்றம் தெரிவித்தது. பிப்ரவரி 2018 மற்றும் பிப்ரவரி 2019-க்கு இடையில், அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் உடலுறவு கொள்வது மற்றும் பிற பாலியல் செயல்களின் 18 வீடியோக்களை படம் பிடித்துள்ளார்.
குற்றவாளி தனது காதலிக்கு தனது ட்விட்டர் மற்றும் கூகுள் டிரைவ் கணக்குகளுக்கு பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களை கொடுத்துள்ளார். மேலும் அவர் இந்த ஆண்டு மார்ச் 29 அன்று அவரது ட்விட்டர் கணக்கில் உள்நுழைந்தார், அங்கு அவர் அவர்கள் உடலுறவு கொள்ளும் நான்கு வீடியோக்களை பதிவேற்றியதையும் விசாரணையின் போது தெரியவந்தது.
குற்றவாளி இரண்டாவதாக இன்னொரு பெண்ணையும் தனக்கு இறையாகியுள்ளார். ஆனால் அவருடனான உறவு குறித்து நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. செப்டம்பர் 10, 2020 அன்று அதிகாலையில், அந்த பெண் குளித்துக் கொண்டிருந்தபோது, தன்னுடன் வீடியோ அழைப்பை மேற்கொள்ளும்படி அவளைத் துண்டியுள்ளன். மேலும் அந்த வீடியோ அழைப்பின் போது அவர்கள் ஒரு வணிகத்தைத் தொடங்குவது பற்றி விவாதித்தனர், மேலும் அவர் தனது கூகுள் டிரைவில் பதிவேற்றும் முன், அவரது அனுமதியின்றி 14 நிமிடங்களுக்கு மேல் அப்பெண்ணனை படம்பிடித்தார்.