TamilSaaga

“இன உணர்வற்ற “தீபாவளி” வீடியோ?” : மன்னிப்பு கேட்டது சிங்கப்பூரின் F45 ஃபிட்னஸ் ஸ்டுடியோ – காணொளி உள்ளே

சிங்கப்பூரில் சிராங்கூன் கார்டனில் உள்ள ஃபிட்னஸ் ஸ்டுடியோ ஒன்று, இன உணர்வற்றதாகக் கருதப்பட்ட தீபாவளி வீடியோவைப் பதிவேற்றியதற்காக தற்போது மன்னிப்புக் கோரியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 5) அன்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட F45 பயிற்சி நிறுவனத்தின் ஒரு பகுதியான சிங்கப்பூர் F45 ஃபிட்னஸ் ஸ்டுடியோ, அவர்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 14 வினாடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டது. அந்த காணொளியில் இரண்டு பெண்கள் தலையை ஆட்டியவாறு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிப்பது போல அமைந்திருந்தது.

இந்த அசைவுகளை செய்யும் போது, ​​வீடியோவில் உள்ள பெண்களில் ஒருவர் “தன் தலையை திருப்ப முடியாது” என்றும் கூறுகிறார். அவர் அவ்வாறு கூறியது பின்னணியில் சிரிப்பு சத்தம் கேட்கிறது. பல தளங்களில் பகிரப்பட்ட இந்த காணொளி 368,000-க்கும் மேற்பட்ட பார்வைகளையும் 2,000 கருத்துகளையும் பெற்றுள்ளது. அதில் பலர் அதன் உணர்வின்மைக்காக விமர்சித்துள்ளனர்

சர்ச்சைக்குள்ளான காணொளி

இந்நிலையில் அந்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, செராங்கூன் கார்டன் F45 கிளை அதன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மன்னிப்புக் கேட்டுள்ளது. மேலும் “F45 எப்போதும் அனைத்து குடும்பங்களுக்கும் ஏற்ற மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கான இடமாக இருந்து வருகிறது, மேலும் நாங்கள் எங்கள் உறுப்பினர்களுடன் பல வேடிக்கையான வீடியோக்களை செய்கிறோம்.” “இந்த வீடியோ இன உணர்வற்றது என்ற கருத்தைப் பெற்றுள்ளது” என்பதை ஒப்புக்கொள்கிறோம். “எங்கள் நோக்கங்கள் ஒருபோதும் கேலி செய்வதோ அல்லது யாருடைய மனதையும் புண்படுத்துவதோ அல்ல. தவறுகளுக்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம், என்று அந்நிறுவனம் மேலும் கூறியது.

F45 உரிமையானது சிங்கப்பூரில் 21 கிளைகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல சமூகங்கள் ஒன்றாக தோழமையோடு வாழும் நாட்டில் இதுபோன்ற காணொளிகளை பதிவேற்றும்பொழுது மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related posts