சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் விரிவாக்கப்பட்ட சமூக வருகைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரில் பணியாற்றி வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இப்போது லிட்டில் இந்தியாவைத் தவிர Geylang Serai/Joo Chiat ஐப் பார்வையிடலாம் என்று அண்மையில் அமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மனிதவள அமைச்சகம் வெளியிட்ட முகநூல் பதிவில் கடந்த வார இறுதியில், “எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் கெயிலாங் செராய்க்கு பயணம் மேற்கொண்டனர் எண்டு கூறியது”.
சிலருக்கு, இத சமூக வருகை அவர்களின் முதல் சமூக வர்கையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் மற்றவர்களுக்கு இது அவர்களின் பழைய நினைவுகளின் ஒரு மறுதொகுப்பாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. “அங்கு வந்த பலருக்கு ஒரு அடைபட்ட வாழ்விலிருந்து கிடைத்த நிம்மதியாகவும் புத்துணர்ச்சியாகவும் இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது”. 51 வயதான பங்களாதேஷ் தொழிலாளர் ஒருவர் பேசியபோது “நானும் எனது நண்பர்களும் இந்த பயணத்தை ரசித்தோம்” என்று கூறினர்.