சிங்கப்பூரில் கெய்லாங் பஹ்ரு சந்தை, உணவு மையம் மற்றும் 146 டெக் வை அவென்யூ சந்தையைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் இன்று திங்கள் (ஜூலை 26) மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இலவச ஆன்டிஜென் விரைவு பெருந்தொற்று சுய பரிசோதனை கருவிகளை பெற்று பயனடைய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 நாட்களில் குறிப்பிட்ட சந்தைகள் மற்றும் உணவு மையங்களை பார்வையிட்ட தனிநபர்களுக்கும், இந்த மையங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் போன்றவர்களுக்கும் இந்த இலவச சுயபரிசோதனை கிட்டை விநியோகிக்க, மக்கள் சங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“இந்த ART கருவிகளைப் பயன்படுத்த தகுதிவாய்ந்த நபர்கள் சுய பரிசோதனை செய்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்” என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு MOH தெரிவித்தது. மேலும் இந்த நிகழ்வு குறித்த தகவலை தெரிந்துகொள்ள https://www.gowhere.gov.sg/art என்ற இணையத்தை நாடலாம் என்றும் சுகாதர அமைச்சகம்.தெரிவித்துள்ளது
சிங்கப்பூரில் நேற்று 117 பேருக்கு தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது. மக்கள் விழிப்புடன் இருந்தால் இந்த தொற்றில் இருந்து விரைந்து மீண்டுவிடலாம் என்பது அறிஞர்களின் கருத்து.