TamilSaaga

தேசிய தினத்தை முன்னிட்டு விதிக்கப்படும் கட்டுப்பாடு – எந்தெந்த பகுதிகளில் தடை தெரியுமா?

சிங்கப்பூரில் தேசிய தினத்திற்கான நாள் நெருங்கி வரும் இந்த வேளையில் சிங்கப்பூரின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பட்டங்களைப் பறக்க விடுவதற்கு ஆளில்லா வானூர்திகளை செலுத்துவதற்கும் மேலும் இது போன்ற சில வான்வழி நடவடிக்கைகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய தினம் குறித்த அணிவகுப்பு தொடர்பிலான நடவடிக்கைகளில் பொதுமக்களின் பாதுகாப்பையும் விமானங்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மரீனா பே மிதக்கும் மேடை உள்ளிட்ட சில இடங்களில் மேற்குறிப்பிட்ட அந்த தடைகள் சில நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரம் வரை அதுபோன்ற வான்வழி நடவடிக்கைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தேசிய தினத்தன்று நடக்கும் அணிவகுப்பின் போதும், மேலும் அதற்கான ஒத்திகைகள் நடக்கும் போதும் விமானங்கள் வானில் பறப்பது மற்றும் அதனால் ஏற்படும் இரைச்சல் சில இடங்களில் அதிகரிக்கலாம் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட இடங்களில் வான்வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு சுமார் 20,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் வான்வழி நடவடிக்கைகள் நடாகும் இடங்களை பற்றிய தகவல்களை மக்கள் OneMap.sg என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்

Related posts