TamilSaaga

இனி ஆன்லைனில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் – சிங்கப்பூர் அரசு முடிவு

சிங்கப்பூரில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மற்றும் சுங்கச்சாவடி சோதனைகள் ஆகியன உள்ளிட்ட மேலும் பல சேவைகள் மின்னிலக்க முறைக்கு மாற்றப்பட உள்ளன.

பொதுமக்கள் எளிய முறையில் சுலபமாக இந்த சேவைகளை பெறவும் ICA எனப்படும் Immigration & Checkpoints Authority அலுவலங்களுக்கு சென்று இந்த சேவைகளை பெறும் நிலையை மாற்றவும் இந்த மின்னிலக்க முறை கொண்டுவரப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் சுங்க சோதனைகளை விரைவாக முடிக்கவும் உடலின் அடையாளங்களை பதிவு செய்யவும் இந்த தானியங்கி மின்னிலக்க முறை சுலபமானதாக அமையும்.

தற்போது காகித வடிவில் வழங்கப்படும் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை இனி மின்னிலக்க முறையில் இணைய பதிவாக பெற முடியும்.

இந்த மின்னிலக்க முறையானது இந்தாண்டு முதல் துவங்கப்பட்டு சேவைகள் வழங்கப்படும்.

Related posts