சிங்கப்பூருக்கு ஒரு முகவர் மூலம் வீட்டு வேலை செய் அழைத்து வரப்பட்ட பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஒரு பெண். அழைத்துவரப்பட்ட வேளைக்கு மாறாக ஒரு கிளப்பில் நடனக் கலைஞராக வேலை செய்யச் அறிவுறுத்தப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் அவர் அந்த கிளப்பிற்கு வந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கிளப்பின் முதலாளி ஒருவரின் நண்பருடன் உடலுறவு கொண்டால் அந்த பெண்ணுக்கு 1,000 வெள்ளி அளிப்பதாக கூறியதாகவும். அதை அவர் மறுத்த நிலையில், முதலாளி ஒருவரால் அந்த பெண் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அடுத்த மாதம், கிளப்பில் இருந்த அந்த பெண்ணும் மற்ற மூன்று நடன கலைஞர்களும் அதிகாரிகளிடம் இதுகுறித்து கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு கிளப்பை நடத்தி வந்த இருவர், பல விபச்சாரம் தொடர்பான குற்றங்கள் மற்றும் நீதியின் போக்கை தடுத்ததற்காக குற்றம் சாட்டப்பட்டனர். நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ராஜேந்திரன் நாகரெத்தினம், மற்றும் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட அருமைக்கண்ணு சசிகுமார். தங்கள் தண்டனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர்.
நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 25) உயர்நீதிமன்றம், ராஜேந்திரனின் மேல்முறையீடுகளை ஓரளவு அனுமதித்தது. மேலும் அவரை ஒரு குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற இரண்டு குற்றச்சாட்டுகளில் அவரது தண்டனையையும் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஒட்டுமொத்தமாக அளிக்கப்பட்ட 30 மாத சிறை மற்றும் 3,000 வெள்ளி அபராதம் தற்போது 19 மாத சிறை மற்றும் 2,500 வெள்ளி அபராதமாக குறைக்கப்பட்டது.
சிங்கப்பூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் நிரந்தர குடியிருப்பாளரான சசிகுமார் ஆகியோர் பல பெண்களை தங்கள் “கோலிவுட்” கிளப்பில் நடனமாட பணியமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.