TamilSaaga

சிங்கப்பூரில் தளர்வடையும் கட்டுப்பாடுகள் – மீண்டும் அலுவலகம் திரும்பும் பணியாளர்கள்

நாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 19) முதல் சிங்கப்பூர் அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி, அதிக ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து வர நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. தொற்று பரவல் அதிகரித்ததை தொடங்கி சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி முதல் சிங்கப்பூரில் தளர்வுகள் அளிக்கப்பட்டது.

பொது சேவை பிரிவு செய்தித் தொடர்பாளர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் அளித்த தகவலின்படி “கோவிட்-க்குப் பிந்தைய புதிய இயல்பில் அதிக வேலை நெகிழ்வுத்தன்மையை ஆதரிக்கும் வகையில் பொது சேவை செயல்படுகிறது என்பர் குறிப்பிட்டிருந்தார். “இது அதிகாரிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, அதே நேரத்தில், நிறுவனத் தேவைகளையும் சமநிலைப்படுத்தும்.”

இரண்டு வாரங்களுக்கு முன்பு, தொற்றுநோயைக் கையாளும் பல அமைச்சர்கள், பணிக்குழு ஆகஸ்ட் 19 முதல் வீட்டிலிருந்து வேலை செய்வது இயல்புநிலையாக இருக்காது என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலாக, தொலைதூரத்தில் வேலை செய்யக்கூடிய 50 சதவீத ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்தனர்.

இந்நிலையில் நாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 19) முதல், 50 சதவிகிதம் வரை பணியாளர்கள் பணியிடங்களுக்குத் திரும்பலாம் என்று அதிகாரிகள் முன்பு அறிவித்திருந்தனர். இதனால் வியாழக்கிழமை முதல் படிப்படியாக பணியிடங்கள் திறப்பது மறுதொடக்கம் செய்யப்படும்

Related posts