TamilSaaga

காந்தியின் கொள்கைகளுக்கு மதிப்பளித்து சிங்கப்பூரில் கொண்டாடப்பட்ட காந்தி ஜெயந்தி விழா!

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் தேதி கொண்டாடப்பட்டதை ஒட்டி இந்தியா முழுவதிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வருடம் தோறும் காந்தியின் பிறந்த நாள் அரசு விடுமுறையாக அனுசரிக்கப்பட்டு இந்தியாவில் அவருடைய கொள்கைகள் கடைபிடிக்கப்படுவது வழக்கம்தான். ஆனால் சிங்கப்பூரிலும் காந்தியின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

காந்தியின் 154 ஆவது பிறந்தநாள் ஆனது சிங்கப்பூரின் குளோபல் இந்தியன் அனைத்து உலக பள்ளியில் அக்டோபர் இரண்டாம் தேதி கொண்டாடப்பட்டதை ஒட்டி பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பள்ளி நிறுவனத்துடன் சேர்ந்து இந்திய வம்சாவளியினரின் சங்கமும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அகிம்சை கொள்கைகளை மாணவர்களிடத்தில் எடுத்துரைத்தனர்.

மேலும் மாணவர்கள் இடத்தில் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காந்திஜி காட்டிய வழியில் வன்முறையை தவிர்த்து அகிம்சையை கடைப்பிடிப்பது முக்கியம் என்று மாணவர்களிடத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் காந்தியின் முற்போக்கு சிந்தனைகள், சுத்தம் தொடர்பான கொள்கைகள், உண்மை விளம்பல், அகிம்சை கொள்கைகள் பற்றி மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டன.

Related posts