ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டு வந்தன. இந்நிலையில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்ட நாளிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் படையினரின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வந்தது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றிய தலிபான், கடந்த திங்களன்று ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் நகரை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து தலிபான் படையினர் ஊடுருவல் காரணமாக ஆப்கானிஸ்தான் நாட்டு பிரதமர் மற்றும் துணை பிரதமர் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு வருகை தரும் மக்களுக்கு உதவ தயாராக உள்ளதாக பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் உறுதியளித்துள்ளார். அங்கு நிலவும் இக்கட்டான அரசியல் சூழல் காரணமாக அங்கு வசிக்கும் பொது மக்கள் பிற நாடுகளை நோக்கி வெளியேறும் நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வருகின்ற மக்களுக்கு உதவ வேண்டும் என்று ஐ.நா உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது.
இதனையடுத்து பிரான்ஸ் நாட்டிற்காக உழைத்த ஆப்கானிஸ்தான் மக்களினங்கள் மறக்கமாட்டோம் என்றும். பிரான்ஸ் நாட்டிற்கு வரும் மக்களுக்கு நிச்சயம் உதவி செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.