சிங்கப்பூரில் 29 வயதுடைய ஒருவரை “அடக்குமுறை கையாளுதல்” வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். சிங்கப்பூரின் வாம்போவாவில் உள்ள தொகுதி 116B ஜலான் டென்டெராமில் அடையாளம் தெரியாத ஒருவரால் 26 வயது பெண் துன்புறுத்தப்பட்டதாக கடந்த சனிக்கிழமை (ஆகுஸ்ட் 7) தங்களுக்கு ஒரு அறிக்கை கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு குறித்து அடுத்தகட்ட விசாரணைகள் போலீஸ் கேமராக்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் நடத்தப்பட்டது. டாங்ளின் போலீஸ் பிரிவின் அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்து அந்த நபரை நேற்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 9) அன்று கைது செய்தனர். குற்றவியல் பிரிவு 354 (1) இன் கீழ் அந்த நபர் மீது இன்று ஆகஸ்ட் 10ம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், அல்லது அபராதம் மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விசாரணை இன்றே முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்கள் மீதான அடக்குமுறை செயல்களுக்கு நமது சிங்கப்பூரில் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.