TamilSaaga

ஒலிம்பிக்கில் இருந்து வீடு திரும்பிய வீராங்கனை.. காத்திருந்த சோகச்செய்தி – கதறி அழுத தனலட்சுமி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவந்த ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் இந்தியாவில் நீரஜ் சோப்ரா ஒரு தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்த நிலையில் இந்திய அணி 7 பதக்கங்களுடன் தாயகம் திரும்பியது. இந்நிலையில் ஒலிம்பிக் தடகளப் போட்டியில் பங்கேற்று தனது சொந்த ஊரான திருச்சிக்கு திரும்பிய தமிழக வீராங்கனை தனலட்சுமி அவர்களுக்கு நிகழ்ந்த ஒரு சோகம் பலரை மனம் கலங்க வைத்துள்ளது.

திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் நான் 22 வயது நிரம்பிய தனலட்சுமி இவர் தேசிய அளவில் பல தடகளப் போட்டிகளில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் நடந்த பல தடகள போட்டிகளில் வெற்றி பெற்று “அதிவேக பெண்மணி” என்ற பெருமையை பெற்றவர் தான் நமது தனலட்சுமி.

இதனையடுத்து தனது கடின முயற்சியால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அவர் தேர்வானார். 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தமிழகம் சார்பாக அவர் பங்கேற்றார். ஆனால் ஒலிம்பிக்கில் இந்திய 400 மீட்டர் தொடர் ஓட்ட அணி தோல்வி அடைந்ததை அடுத்து அவர்கள் மீண்டும் தமிழகம் திரும்பினார். இந்நிலையில் அவ்வாறு தமிழகம் திரும்பிய தனலட்சுமிக்கு ஒரு அதிர்ச்சி தரும் தகவல் காத்திருந்தது.

கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி தனலட்சுமியின் அக்கா எதிர்பாராத விதமாக மரணம் அடைந்த செய்தி கேட்டு அவர் விமான நிலையத்திலேயே கதறியழுத காட்சி காண்போரை நெகிழச் செய்தது. ஆனால் அக்கா இறந்த செய்தியை தனலட்சுமியிடம் அவரது பெற்றோர் தெரிவிக்கவில்லை. இந்த செய்தி தெரிந்தால் அவர் தனது ஒலிம்பிக் பயணத்தில் கவனம் செலுத்த முடியாது என்பதால் அவரது பெற்றோர் இந்த செய்தியை மறைத்துள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தில் அவர் வந்திறங்கியபோது இந்த செய்தியை அறிந்ததும், தனலட்சுமி விமான நிலையத்திலேயே கதறி அழுத்த கட்சி காண்போரை கண்கலங்க செய்தது.

Related posts