Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் என்பது நம் கண்களையும் மூளையையும் ஏமாற்றி, யதார்த்தத்தை வேறு விதமாக காட்டும் ஒரு தந்திரமான விளையாட்டு. இந்த விளையாட்டுகள் உங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த மட்டுமல்லாமல், உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்சார் திறன்களையும் மேம்படுத்த உதவும். இதனை சுவாரஸ்யமாக அனுபவிக்கவும், உங்கள் திறனை சோதிக்கவும் முயற்சி செய்யுங்கள்!
மறைந்திருக்கும் பொருளை கண்டுபிடித்தல், இரண்டு படங்களில் உள்ள வேறுபாடுகளைக் கண்டறிதல் போன்ற பல்வேறு வகையான ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டுகள் நம் மூளையை நன்றாக வேலை செய்ய வைத்து, கவனத்தையும் செறிவையும் அதிகரிக்க உதவும்.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
இந்த முறை கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ‘964’ என்ற எண் தொடர்ந்து வரிசையாக எழுதப்பட்டுள்ளது. பார்ப்பவர்களின் கவனத்தை விலக்க ‘994’ என்ற எண் சிக்கலாக மறைத்து இடம் பிடித்துள்ளது. அதைதான் நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டும்.
படத்தில் எங்காவது ஒளிந்துள்ள ‘994’ என்ற எண்ணை கண்டுபிடிக்க வேண்டும். இதை கண்டுபிடிப்பதற்கு உங்கள் பார்வை மற்றும் மூளையின் கூர்மையை பயன்படுத்துங்கள்.
இது சற்றே கடினமானது. ஏனெனில் 200 தடவைக்கு மேல் ‘964’ என்ற எண் படத்தில் உள்ளது. உங்கள் ஆர்வத்தையும், செறிவையும் சோதிக்கும் இந்த சவாலுக்கு தயாராகியிருக்கிறீர்களா? முயற்சி செயுங்கள்!
முதலில் இந்தப் படத்தைப் பார்க்கும் போது எல்லா எண்ணும் ‘964’ என்று இருப்பதாகவே தோன்றும். படத்தின் கீழிருந்து ஐந்தாவது வரிசையை சற்று உன்னிப்பாக பார்த்தால் சரியான விடை கிடைக்கும். இடது ஓரத்திலிருந்து ஒவ்வொரு எண்ணாக பார்க்கும் போது ‘994’ என்ற ஒரேவொரு எண் மட்டும் வித்தியாசமாக இருக்கிறது தெரிகிறதா?.
இந்த சுவாரஸ்ய புதிர் உங்களின் மூளையின் சவாலை வெற்றி பெற்றதை உறுதிப்படுத்துகிறது! 😊