TamilSaaga

“சொந்த முயற்சியில் அடுத்த சாதனை” – BMW கார்.. மகிழ்ச்சியோடு போஸ்ட் போட்ட பிரபல தொகுப்பாளினி மணிமேகலை

தமிழகத்தை பொறுத்தவரை வெள்ளித்திரை நட்சத்திரங்கள் உள்ள அதே வரவேற்பும் ரசிகர்களின் அன்பும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் அதிகளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அப்படி ரசிகர்களின் அன்பிலும் அவர்களின் ஆதரவில் வளர்ந்த ஒரு தொகுப்பாளினி தான் மணிமேகலை. கோயம்புத்தூரில் ராமஐயப்பன் மற்றும் ஜோதிமணி என்கின்ற தம்பதியருக்கு கடந்த 1993ம் ஆண்டு பிறந்த குழந்தை தான் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை.

கோவையில் பிறந்த இவர் சென்னையில் தனது பள்ளிப் படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். வடபழனியில் உள்ள SRM யுனிவர்சிட்டியில் தனது பட்டப்படிப்பை முடித்த இவர் தனது கல்லூரி நாட்களிலேயே பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். அந்த காலகட்டத்தில் அங்கு பணி செய்து வந்த ஹுசைன் என்பவருடன் காதல் கொண்டார்.

மேலும் இந்த ஜோடி கடந்த டிசம்பர் 6 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மணிமேகலை முதல் முதலாக டிசம்பர் 2009ம் ஆண்டு தனது 17 வயதில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல ரியாலிட்டி ஷோ, லைவ் நிகழ்ச்சிகளை சன் மியூசிக் சேனலுக்காக இவர் தொகுத்து வழங்கி உள்ளது குறிப்பிடதக்கது. மிகக்குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய தொகுப்பாளினியாக மணிமேகலை திகழ்ந்து வருகிறார்.

கமல்ஹாசன் உள்ளிட்ட மிக முக்கிய பிரபலங்களை சன் டிவி, கே டிவி மற்றும் சன் மியூசிக் ஆகிய நிறுவனங்களுக்காக இவர் பேட்டி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு பிரபல விஜய் தொலைக்காட்சியிலும் இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் தொகுப்பாளினியாக பணிபுரிந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அவரும் அவரது கணவர் உசைன் அவர்களும் தற்போது புதிதாக ஒரு BMW x1 கார்ரை தற்பொழுது வாங்கி உள்ளனர். அந்த வாகனத்துடன் எடுத்த புகைப்படங்களை தங்களுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிமேகலை பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related posts