TamilSaaga

“சயாம்” மரண ரயில் பாதை! சிங்கப்பூரில் இருந்து போய் கொத்து கொத்தா கொல்லப்பட்ட “தமிழனின்” வரலாறு!

“சயாம்” மரண ரயில் பாதை! சிங்கப்பூரில் இருந்து போய் கொத்து கொத்தா கொல்லப்பட்ட “தமிழனின்” வரலாறு!

இந்த உலகமே நினைத்துப் பார்க்கவே பயப்படும் ஒரு கோர சம்பவம். உங்களிடம் தீராத பகை கொண்டிருக்கும் பகையாளிக்குக் கூட, இப்படியொரு வாழ்க்கை அமையக் கூடாதென்று நினைக்க வைக்கும் சம்பவம்.

இரண்டாம் உலகப் போர் காலத்துல ஜப்பானியர்கள் கட்டுனாங்க. இந்த ரயில் பாதை, தாய்லாந்துல இருந்து பர்மா (இப்ப மியான்மர்) வரைக்கும் போகுது. சுமார் 415 கிலோமீட்டர் தூரம் இருக்கும். ஏன் இத மரண ரயில் பாதைன்னு சொல்றாங்கன்னா, இத கட்டறதுக்கு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாச்சு.

ஜப்பானியர்கள் இந்த ரயில் பாதைய கட்டுனதுக்கு காரணம் என்னன்னா, அவங்க படைகளுக்கும் தளவாடங்களுக்கும் ஒரு பாதுகாப்பான வழி வேணும்னு. கடல் வழியா போனா நேச நாடுகளோட கப்பல்கள் தாக்குமேன்னு பயந்து, நிலத்து வழியா ஒரு பாத அமைக்கணும்னு முடிவு பண்ணாங்க

மேலும் படிக்க :சிங்கப்பூரில் தற்போது எந்தெந்த பிரிவுகளுக்கு மட்டும் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளது? 

இந்த வேலைக்கு பயன்படுத்தப்பட்டவர்கள்:

போர்ல கைது பண்ணப்பட்ட வீரர்கள் – சுமார் 60,000 பேர்

ஆசிய நாடுகள்ல இருந்து கொண்டு வரப்பட்ட தொழிலாளர்கள் – சுமார் 2,50,000 பேர்

இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, இந்த ஆசியத் தொழிலாளர்கள்ல பெரும்பாலானவங்க தமிழர்கள். சுமார் 1.8 லட்சம் தமிழர்கள் இந்த வேலைக்கு கொண்டு வரப்பட்டாங்க. அவங்கள மலேசியா, சிங்கப்பூர்னு பல இடங்கள்ல இருந்து கூட்டி வந்தாங்க.

இந்த ரயில் பாதை கட்டற வேலை எப்படி இருந்தது தெரியுமா?

  • காடு மலைகள நடுவுல வேலை செய்யணும்
  • பெரிய பெரிய பாறைகள வெட்டணும்
  • ஆறுகள மேல பாலம் கட்டணும்
  • எல்லாமே கையால செய்யணும் – பெரிய எந்திரங்கள் எதுவும் இல்ல

இந்த கடுமையான வேலைய செய்யறதுக்கு ஜப்பானியர்கள் கொடுத்த சலுகைகள் என்னன்னா:

  • தினமும் 18 மணி நேரம் வேலை
  • சாப்பாடுக்கு கொஞ்சம் அரிசிக் கஞ்சியும் கருவாடும்
  • தூங்கறதுக்கு சரியான இடம் இல்ல
  • மருத்துவ வசதி கிடையாது

இப்படி கொடுமையான சூழ்நிலைல வேலை செஞ்சதால, பல்லாயிரக்கணக்கான பேர் பசி, நோய், கடும் உழைப்புனாலெல்லாம் செத்துப் போனாங்க

1.8 லட்சம் தமிழர்கள்ல வெறும் 35,000 பேர் மட்டும்தான் உயிரோட திரும்பி வந்தாங்க

மொத்தமா சுமார் ஒரு லட்சம் பேர் இந்த ரயில் பாதை கட்டுமானத்துல உயிரிழந்திருக்காங்க

இந்த ரயில் பாதைல மிகவும் கொடூரமான பகுதி எதுன்னா “நரகத்தீ கணவாய்” (Hellfire Pass). இது ஒரு பெரிய பாறைய வெட்டி உருவாக்கப்பட்ட பாதை. இங்க நடந்த கொடுமைகள் சொல்லி மாளாது.

கடைசியா, 1943 அக்டோபர்ல இந்த ரயில் பாதை முடிஞ்சது. ஆனா அதுக்குள்ள எவ்வளவோ உயிர்கள் பலியாச்சு.

இப்ப இந்த ரயில் பாதைய ஒரு வரலாற்று சின்னமா பாதுகாக்கறாங்க. ஆனா இதுல தமிழர்களோட பங்களிப்பு பத்தி பெரிய அளவுல பேசப்படல. அதனால இத “மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு”ன்னு சொல்றாங்க.

Related posts