TamilSaaga

அடேங்கப்பா! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொழிலாளர்களுக்கு 8 மாத போனஸ் ஆ?

சாங்கி விமான நிலையம்  உலக அளவில் மிகவும் பிரபலமான விமான  நிலையமாகும்.  சமீப காலங்களில் விமான போக்குவரத்தை மக்கள் அனைவரும் பெரிதும் விரும்புகின்றனர்.  வெளிநாட்டு பயணங்கள் அதிகரிப்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.  ஆசியாவிலேயே  அதிகமான மக்கள் கூடும் ஒரு விமான நிலையமாக இருக்கிறது. சாங்கி விமான   நிலையத்திலிருந்து உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு  விமான சேவை வழங்கி வருகிறது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.  அப்படிப்பட்ட ஒரு விமான நிலையத்தில்  வருடாந்திர லாபம்  எப்படி இருக்கும்?  ஆம் விமான சேவைகள் அதிகரிப்பதால்,  ஆண்டுதோறும்  சிங்கப்பூர்  ஏர்லைன்ஸ் -இன்  வருடாந்திர லாபம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  கடந்த  2023 ஆண்டிற்கான நிகர லாபத்தை விட 2024 ஆம் ஆண்டு  அதிக லாபத்தை பெற்றிருக்கிறது.

சிங்கப்பூர்  ஏர்லைன்ஸ்,  துபாய் எமிரேட்ஸ் போலவே  விமான நிறுவன ஊழியர்களுக்கு பிராஃபிட்  ஷேரிங் போனசை அறிவித்திருக்கிறது.  ஆம்,  ஏற்கனவே சில விமான நிறுவனங்கள்  இத்தகைய போனசை தங்களுடைய ஊழியர்களுக்கு அறிவித்திருக்கிறது.  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்த நடைபாண்டிற்கான லாபத்தை வெளியிட்டு இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன்  பகிர்ந்து கொண்டது.  மேலும் இந்த பதிவில்,  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு எவ்வளவு லாபம்  ஈட்டி இருக்கிறது?  அதன் தொழிலாளர்கள் பெரும் போனஸ் பற்றி விரிவாக பார்க்கலாம். SIA  நிறுவனத்தின் தலைவராக இருக்கும் Goh Choon Phong  தொழிலாளர்களுக்கான பிராஃபிட் ஷேரிங் போனசை பற்றி அறிவித்திருந்தார்.  அவர் கூறியதை பற்றி மேலும் விரிவாக பார்க்கலாம்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் அதாவது 2023 மற்றும் 2024 காண நிதியாண்டில் 1.98  பில்லியன் டாலர் நிகர லாபத்தை  எட்டியுள்ளது.  மார்ச் மாதம் 31 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு வரையிலான லாபம் மட்டும் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.  24 சதவீதம் லாபம் அதிகரிப்பதால்  நிகர வருமானம் 2.6  பில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டு இருக்கிறது.  இத்தகைய அதிகபட்சமான லாபங்களை அடைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது,  வடக்கு ஆசிய  பிராந்தியங்களுக்கான விமான சேவை அதிகரிப்பது.  ஆம் கோவிட் 19   தொற்று காலங்களுக்குப் பிறகு  இப்போது வடக்கு ஆசிய பிராந்தியங்கள் விமான சேவைகளுக்கு எந்த விதமான தங்கு தடையும் இன்றி பச்சைக்கொடி காட்டியுள்ளது.  குறிப்பாக சீனா, தைவான்,  ஹாங்காங் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில்  அதிகமான விமான போக்குவரத்து  இருந்தது.  பயணிகள் விமானங்கள் தவிர சரக்கு விமானங்களும் அதிக எண்ணிக்கையில் பறந்தது.  பயணிகள் விமான சேவை  மற்றும் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.  இதன் விளைவாக 2024 ஆம் ஆண்டுக்கான நிகர வருமானம்  ஏழு சதவீதம்  உயர்ந்து  19 பில்லியன் டாலர்களாக  நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

2023-24   நிதியாண்டில் சரக்கு தேவைகள் அதிகமாக  இருந்ததால்   ஆரோக்கியமான இ-காமர்ஸ்  தேவைகளும் அதிகரித்து இருந்தது.  இதன் விளைவாக  நிறுவனம் இத்தகைய லாபத்தை எட்ட முடிந்தது என்று SIA  நிறுவனத் தலைவர் அறிவித்திருக்கிறார்.  மேலும்,  வருங்காலங்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்   இன்னும் பல விதமான வசதிகளை அதிகரிப்பதோடு,  பயணிகளுக்கான  சராசரி கட்டடத்தை நிர்ணயித்து அதன் மூலம் இன்னும் வளர்ச்சியை காண விழைகிறது.

இந்திய விமான நிறுவனம் விஸ்தாரா நிறுவனத்துடன் இணைந்ததன் விளைவாக,  சிங்கப்பூர் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம்  ஏர்    இந்தியாவின் 25 சதவீத பங்குகளை வாங்க இருக்கிறது.  இந்த பங்குகளை  வாங்குவதால் ஏற்கனவே 200 விமானங்களை கொண்டுள்ள சிங்கப்பூர்  ஏர்லைன்ஸ் நிறுவனம்  இனி 209  விமானங்களாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மேலும் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக தலைவர்  அறிவித்திருக்கிறார்.

இவ்வாறு வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்  நிறுவனம்  தங்களுடைய தொழிலாளர்களுக்கு ட்ராபிக் ஷேரிங் போனஸ்- ஐ  இருக்கிறது.  கடந்த ஆண்டு 6.6  மாதங்களுக்கான போனசை  அறிவித்திருந்தது,  கொரோனா தொற்று காலகட்டங்களில்,  ஊழியர்களின் பெரும் பங்களிப்பிற்காக  நிறுவனம் 1.5  மாதங்களுக்கான கருணை ஊக்க தொகையை  அறிவித்திருந்தது.  இந்த ஆண்டு அறிவிக்கப்பட இருக்கும் போனசை குறித்து  சிங்கப்பூரின் துணை விமான நிறுவனமான  ஸ்கூட்டிடம் கருத்து கேட்டுள்ளது.  ஸ்கூட் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு  கடந்த ஆண்டு நான்கு மாத போனசும்  மற்றும் 1.5 மாத  கருணைத் தொகையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts