TamilSaaga

பெண்ணின் மூளைக்குள் உயிர் வாழ்ந்த 8 செ.மீ நீளமுள்ள புழு… ஸ்கேன் ரிப்போர்ட்டை கண்டதும் ஆடிப்போன டாக்டர்கள்!

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 64 வயது பெண் சில மாதங்களாக மன அழுத்தம், ஞாபக மறதி, வயிற்றுப்போக்கு, வறட்டு இருமல் மற்றும் இரவில் வியர்வை போன்ற தொந்தரவுகளால் 2021 ஆம் ஆண்டு முதல் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக இந்த தொந்தரவு மேலும் அதிகமாக இருக்கவே உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். முதலில் நரம்பியல் சம்பந்தமாக பிரச்சனை ஏதாவது இருக்கும் என்று சந்தேகப்பட்ட மருத்துவர்கள் MRI ஸ்கேன் எடுக்கச் சொல்லி பரிந்துரைத்தனர்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் மூளைக்குள் ஏதோ இருப்பதை புரிந்து கொண்ட மருத்துவர்கள் முழுவதுமாக ஸ்கேன் செய்து பார்த்ததில் அதிர்ச்சியான சம்பவம் தெரிய வந்துள்ளது. பெண்ணின் தலைக்குள் 8 சென்டிமீட்டர் நீளத்தில் உயிருடன் ஒட்டுண்ணிப்புழு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மனிதனின் மூளைக்குள் ஒட்டுண்ணி புழு கண்டறியப்பட்டது இதுவே முதல் முறை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை இது போன்ற சம்பவத்தை மருத்துவ உலகம் கேள்விப்பட்டதில்லை. இந்த புழு எப்படி பெண்ணின் மூளைக்குள் வந்தது என்ற குழப்பமும் நீடிக்கிறது.

பொதுவாக இந்த புழு மலைப்பாம்புகளின் இரைப்பையில் மட்டுமே காணப்படும் குழுவாகும். ஒருவேளை மலைப்பாம்பு கழிவு ஏதாவது புல்வெளியில் இருந்திருந்து, அதன்மூலம் ஒட்டுண்ணியானது பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலுக்குள் வாய் வழியாகவோ அல்லது வேறு ஏதாவது வழியாகவோ சென்று குழுவாக உருவெடுத்திருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

Related posts