TamilSaaga

இனி சிங்கப்பூர் செல்ல போலி ஏஜென்ட் பற்றிய பயம் தேவையில்லை! பணம் கட்டும் முன் இதனை செக் பண்ணிட்டு செயல்படுங்கள்!

இந்தியாவில் இருந்தும் மற்றும் பல நாடுகளில் இருந்தும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு, குடும்ப கஷ்டத்தை பார்க்க முடியாமல் எப்படியாவது நம் குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்று நினைத்து, மக்கள், நாடு, ஊர், குடும்பம், மனைவி, நண்பர்கள் என்று அனைத்து உறவினர்களையும் விட்டு பல பல கனவுகளுடன் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு வருகின்றனர்.

பல இடங்களில் வேலை ஏற்பாடு செய்கின்ற ஏஜென்டுகள் வேலை கிடைத்து விட்டது நீங்கள் இனி சிங்கப்பூர் செல்லலாம் என்று நம்ப வைத்து அதற்கான தொகையை செலுத்தும்படி அறிவுறுத்துவார்கள். பிறகு பணமோசடி செய்து ஆள் இருக்குமிடம் தெரியாத வண்ணம் இன்னொருவரை ஏமாற்ற வேறு இடத்திற்கு சென்றுவிடுவார்கள்.நன்றாக விஷயம் தெரிந்தவர்கள் கூட சில சமயம் ஏமாந்துவிடுகிறார்கள்.

இந்த மனக்கவலை பலரை மரணத்திற்கு கூட இழுத்து சென்று விடுகிறது.இதனால் யாரும் ஏஜென்டுகளை நம்புவதில்லை,

ஆனால் இனி அதை நினைத்து பயம் தேவை இல்லை இனி சிங்கப்பூருக்கு வேலைக்காக செல்ல ஆசையாக பல கனவுகள், ஏக்கங்கள், இருப்பவர்களுக்கு ஏஜென்ட் நினைத்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய ஏஜென்ட் நமக்கு உண்மையாக நமது வேலைக்காக விண்ணப்பித்தாரா? என்று சுலபமாக அறிந்து கொள்ளும் வசதியை சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம்(MOM) ஏற்படுத்தி உள்ளது.

நம் ஏஜென்ட் நம் வேலைக்கு விண்ணப்பித்துள்ளாரா? என்பதை எப்படி அறிய முடியும்?

முதலில் Google தளத்திற்கு சென்று அங்கே “IPA status check” or “work pass application status”என்று type செய்துகொள்ளவும் (Ipa- in principle approval letter) முதலிலேயே, Ministry of manpower தளத்தின் link வந்துவிடும், அதில் “check work pass and application status” என்று இருக்கும் அதை click செய்து உள்ளே செல்லவும். உள்ளே சென்றவுடன் மறுபடியும் check work pass and application status என்று இருக்கும் (இங்கு 24 மணி நேரமும் service இருக்கும்) அதை click செய்து உங்களுக்கு வேண்டும் மொழியையும் click செய்து கொள்ளவும்.

அடுத்து அங்கு “pass status”என்று இருக்கும் அதனை தொடர்ந்து continue என்று இருக்கும் அதை click செய்தால் உங்கள் date of birth மற்றும் passport எண் கேட்கும் அந்த தகவல்களை கொடுத்த பின்னர் உங்கள் வேலை விண்ணப்பித்து இருந்தால், “Valid” , “aprroved” அல்லது “rejected” என்று வரும், வின்னாப்பிக்கவில்லை என்றால் எந்த ஒரு தகவலும் வராது. இவ்வாறு உங்கள் ஏஜென்ட் அல்லது நிறுவனம் வேலைக்கான விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளார்களா என்று தெரிந்து கொள்ள முடியும்.

கண்மூடி தனமாக யாரையும் நம்பாமல் இந்த வழிமுறைகளை உபயோகப்படுத்தி கவனமாக தெரிந்து கொண்டு பணத்தை கட்டவும்.

Related posts