TamilSaaga

சிங்கப்பூரில் மலைக்க வைக்கும் “இன்டர்நெட் காதல் மோசடி”.. டன் கணக்கில் பொய் சொல்லி “15 மில்லியன் டாலர்” மோசடி – அப்பாவி வெளிநாட்டு ஊழியர்களை கட்டம் கட்டும் கும்பல்

சிங்கப்பூர்: காதல் என்பதே இந்த காலத்தில் “காத்துவாக்கில் ரெண்டு” என்று தறிக்கெட்டு போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் ஆன்லைன் மூலம் ஏமாற்றப்படும் காதல் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது.

ஹஸ்கி வாய்ஸில் உடம்பை சிலிர்க்க வைக்கும் குரலில் பேசும் பெண் குரல், ஏமாறும் நபர்களின் வீட்டு பாத்ரூம் துடைப்பான்கள் வரை துடைத்து எடுத்துவிட்டுச் சென்றுவிடுகின்றது.

இதில் ஆன்லைன் காதல் மோசடியில் சிக்கும் ஆண்களின் நிலை படுமோசம். மோசடிக்காரர்கள் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்க வேண்டும். இல்லையெனில், இவர்கள் அரங்கேற்றிய காம லீலைகள் புகைப்படங்களாகவோ, ஆடியோக்களாகவோ, வீடியோக்களாகவோ வெளியிடப்படும் என்று மிரட்டப்படுவார்கள். திருடனுக்கு கருந்தேள் கொட்டியது போல் வாயை பொத்திக் கொண்டு இருக்க வேண்டியிருக்கும்.

அந்த வகையில், சிங்கப்பூரில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, குறைந்தது 384 பேர் இணைய காதல் மோசடிகளுக்கு இரையாகி, குறைந்தது $15 மில்லியனை இழந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. (அடங்கப்பா!)

மேலும் படிக்க – சிங்கப்பூர் Restaurant-ல் Waiter வேலைக்கு Temporary Employment Pass-ல் உடனடி விசா

இதுகுறித்து சிங்கப்பூர் போலீஸ் இன்று (மே.19) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிங்கையில் சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களாக அறிமுகமாகி, அவர்களிடம் நல்ல உறவை முதலில் வளர்த்துக் கொள்கின்றனர். நீயில்லாமல் நானில்லை என்ற ரேஞ்சுக்கு வந்த பிறகு விலையுயர்ந்த பரிசுகளை உங்களுக்காக அனுப்பியுள்ளதாக கூறுவார்கள்.

சம்பந்தப்பட்ட நபர், அந்த விலையுயர்ந்த பரிசுக்காக காத்திருக்க, கொரியர் நிறுவனத்திடம் இருந்து அழைப்பு ஒன்று வரும். அதில், உங்களுக்கு அனுப்பப்பட்ட பார்சல் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதை விடுவிக்க வேண்டுமெனில், குறிப்பிட்ட அளவு பணம் செலுத்த வேண்டும் என்று கூறுவார்கள். இவரும் தன் அன்புக்குரியவரின் காஸ்ட்லி பரிசு என்று நம்பி பணத்தைக் கட்டுவார். அதன் பிறகே தான் வசமாக ஏமாற்றப்பட்டது அந்த நபருக்கு தெரிய வரும்.

மேலும் படிக்க – சாங்கி ஏர்போர்ட்டில் இனி பாஸ்போர்ட் தேவையில்லை.. அறிமுகமாகிறது “Biometric verification” – அடுத்த லெவலுக்கு முன்னேறும் சிங்கப்பூர்

அந்த வகையில் 2020 இல், 822 இணைய காதல் மோசடி வழக்குகள் சிங்கப்பூரில் பதிவாகின. இது 2011 இல் பதிவான 62 வழக்குகளில் இருந்து 13 மடங்கு அதிகமாகும். அதுமட்டுமின்றி, சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களும் இந்த ஆன்லைன் காதல் மோசடிகளில் சிக்காமல் இல்லை. இதுபோன்ற migrant workers-ஐ குறிவைத்தே பல போலி காதல் அழைப்புகள் வருகின்றன.

இதுபோன்ற மோசடிகள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், 1800-255-0000 என்ற போலீஸ் ஹாட்லைனை அழைக்கலாம். மோசடிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, மக்கள் ஸ்கேம் எச்சரிக்கை இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது 1800-722-6688 என்ற ஸ்கேம் எதிர்ப்பு ஹாட்லைனை அழைக்கலாம் என்று சிங்கப்பூர் போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts