ஒவ்வொரு ஆண்டும் விமான பயணங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் சுமார் 25 சதவீதம் வரை இது உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இப்பொழுது விமான பயணங்களை எளிதில் மேற்கொள்ள முடிகிறது. அத்தோடு விமான சேவைகள் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. இதனால் எளிதில் வெவ்வேறு நாடுகளுக்கு எளிதில் செல்ல முடிகிறது. மற்ற பயணங்களை விட விமான பயணம் அதிவிரைவாக செல்லக்கூடியவை எனினும் விமான பயண கட்டணம் அதிகமாக இருக்கும்.
வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்கள், ஆண்டிற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ விமான சேவையை பயன்படுத்துகின்றனர். ஆனால் தொழில் ரீதியாக மற்ற நாடுகளுக்கு செல்பவர்கள் விமான சேவையை ஒரு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது பல முறையோ அவர்களுடைய தேவையைப் பொறுத்து பயன்படுத்துகின்றனர். இது போன்று தொழில் ரீதியாக அடிக்கடி செல்பவர்கள் மிக அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டி உள்ளது. இதனால் தனி மனிதனுக்கு அல்லது ஒரு நிறுவனத்திற்கோ பயண செலவு ஒரு பெரும் செலவாக அமைகிறது. பொதுவாக, தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக செல்பவர்கள், மிகப் பெரிய காலமே செல்கிறார்கள்.
இதுபோன்று குறுகிய காலகட்டத்திற்கு விமான பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு அவர்களுடைய பயண செலவை குறைக்கும் வகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிரடி தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்தியாவின் மிக பிரபலமான டாடா குடும்பத்தை சார்ந்ததாகும். கடந்த 2022 ஆம் ஆண்டு டாட்டா குழுமம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்கி அதனை தனதாக்கிக் கொண்டது. தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் மொத்தம் 65 விமானங்கள் உள்ளன. இது மொத்தம் 31 உள்நாட்டு மற்றும் 14 சர்வதேச விமான நிலையங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் பல்வேறு நகரங்களை இணைக்கிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் Xpress Lite fare என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குறுகிய காலகட்டத்திற்கு விமான சேவையை பயன்படுத்துபவர்கள் தங்களுடைய பயண செலவை குறைக்கலாம். தங்களுடைய check-in baggage மூலம் தள்ளுபடிகளை அனுபவிக்கலாம். check-in baggage இல்லாமல் பயணம் செய்து பயணிகளுக்கு பயண கட்டணம் மிக குறைவாக இருக்கும். ஒரு இரு நாட்கள் பயணம் செய்பவர்கள் தங்களுடைய பொருட்களை cabin baggage மூலம் எடுத்து செல்லலாம். இதனால் தங்களுக்கு check-in baggage-ன் தேவை இருக்காது.
ஒருவேளை தாங்கள் உங்களுடைய check-in baggage முன்பதிவு செய்து விட்டீர்கள் என்றாலும் நீங்கள் தள்ளுபடி கட்டணங்களை அனுபவிக்கலாம். ஆம் தள்ளுபடி கட்டணங்கள் மட்டுமல்லாமல் இலவச cabin baggage-ம் பெற்று பயன் பெறலாம். உங்களுடைய baggage check-in செய்ய நீங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். இந்த வரிசையில் குறைப்பதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், இதை முன் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் முன்பதிவு செய்யும்போது, உங்களுக்கு +15 கிலோ மற்றும் +20 கிலோ செக்-இன் பேக்கேஜ் அலவன்ஸ்களை கிடைப்பது மட்டுமின்றி +3 கிலோ cabin baggage வசதியும் பெற முடியும். இவை அனைத்தும் தள்ளுபடி கட்டணத்தில் கிடைக்கும்.
விமான பயணிகளுக்கு பின்னர் கூடுதலாக baggage வசதி தேவைப்பட்டால், அதையும் அவர்கள் தள்ளுபடி விலையிலேயே பெற முடியும். ஆனால் இவை அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கே பொருந்தும். இந்த திட்டத்தின் நோக்கம் check-in baggage-க்கு காண நீண்ட வரிசையை குறைப்பதே. இதனால் விமான பயணிகள் தங்களுடைய பயண செலவை குறைக்கலாம்.
இந்த திட்டத்தை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களும் அல்லது சர்வதேச விமான போக்குவரத்துகளுக்கும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஃப்ளை அஸ் யூ ஆர் என்கிற பிராண்டை உறுதிப்படுத்தி, தங்களுடைய பயனாளர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியான செய்தியை அறிந்திருக்கிறது.
இந்த திட்டத்தை பயன்படுத்த, நீங்கள் ஆன்லைனில் விமான பயணம் கட்டணத்தை செலுத்தும் போது check-in baggage வசதியை குறித்தவாறு செக் செய்ய வேண்டும். அப்படி செய்வதால் உங்களுக்கு கட்டணம் தள்ளுபடி விலையில் காண்பிக்கப்படும், பிறகு நீங்கள் விமான கட்டணத்தை செலுத்தலாம்.