சிங்கப்பூரில் செப்டம்பர் 1, 2023 முதல் அறிமுகமாகி இருக்கும் NTS (என் டி எஸ்) பர்மிட் பற்றிய முழு விவரங்களை ஏற்கனவே நாம் பார்த்தோம். அதாவது NTS எனப்படும் Non Traditional Sector பெர்மிட் என்பது குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டுமே கொடுக்கப்படும் பெர்மிட் ஆகும்.
இந்த பெர்மிட் ஆனது கட்டுமான துறை போன்ற துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொடுக்க முடியாது. அப்படி என்றால் எந்தெந்த துறையின் கீழ் வேலைக்கு வருபவர்கள் இந்த பெர்மிட்டின் கீழே அப்ளை செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
- சிங்கப்பூரில் இருக்கும் இந்தியன் ரெஸ்டாரண்டுகளில் குக் வேலைக்கு செய்பவர்கள் இதற்கு கீழ் அப்ளை செய்யலாம்.
- உணவு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் இதன் கீழ் அப்ளை செய்யலாம். எடுத்துக்காட்டாக வெஜிடபிள் சாஸ் தயாரிப்பவர்கள், ஊறுகாய் போன்றவை தயாரிக்கும் தொழில்.
- உணவு தொழிற்சாலைகளிலேயே சூப்பர்வைசர், பேக் செய்பவர்கள் போன்றவர்கள் இந்த வேலையின் கீழ் அப்ளை செய்ய முடியாது.
- உணவுத்துறை அல்லாமல் மற்ற துறையில் சீட் மெட்டல் ஒர்க், வெல்டிங், மெட்டல் மோல்டர்ஸ், கோர் மேக்கர்ஸ், ஸ்ட்ரக்சுரல் மெட்டல் ப்ரிப்பேர் செய்பவர்கள் போன்றோர் இந்த பெர்மிட்டியின் கீழ் வேலைக்கு அப்ளை செய்யலாம்.
- இதற்கு முக்கியமான நிபந்தனை அப்ளை செய்பவர்கள் பெர்மிட்டில் எந்த தொழில் என்றதோ அந்த தொழிலை தான் செய்ய வேண்டும்.
- மேலும் வேலைக்கு சேர்பவர்களுக்கு குறைந்தபட்சம் சம்பளமாக 2000 டாலர் வழங்கப்பட வேண்டும். சாதாரண ஒர்க் பெர்மிட்டை போன்று அல்லாமல், குறிப்பிட்ட துறையில் நல்ல சம்பளத்தில் தரமான ஆட்களை வேலைக்கு சேர்க்க இந்த பெர்மிட்டில் வேலை செய்ய 8% கோட்டா ஒதுக்கப்பட்டுள்ளது.