உலக அளவில் முதலீட்டாளர்களை இருக்கும் நோக்கில் உலக முதலீட்டாளர்கள் மாநாடானது ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்றும் திங்கட்கிழமையான இன்றும் நடைபெற திட்டமிட்டுள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ்,ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்றன.
மேலும் 450 க்கு மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளும், 50 நாடுகளில் இருந்து முக்கியமான வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு முக்கியமான முதலீடு கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்காவின் சோலார் பேனல்கள் தயாரிக்கும் முக்கிய நிறுவனமான ஃபர்ஸ்ட் சோலார் எனப்படும் நிறுவனம் தமிழ்நாட்டில் 5600 கோடி முதலீடு செய்ய உள்ளதாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் தமிழக அரசு முயன்று பெற்ற இந்த வெற்றியானது இந்தியாவில் பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.
மேலும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் புகழ்பெற்ற கோத்ரேஜ் எனப்படும் நிறுவனம் சிந்தால் சோப்பு ஆலையை தொடங்க கையெழுத்திட்டுள்ளது. இதில் 5 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளாக இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்படி ஒரு மனிதாபிமானம் உள்ள நிபந்தனையை பிரித்ததில் உலகிலேயே தமிழ்நாடு முதல்முறையாக நிகழ்த்தி காட்டியுள்ளது என்ற பெருமையை பெற்றுள்ளது. இன்று நடைபெறும் மாநாட்டில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என நம்பப்படுகின்றது.