TamilSaaga

Exclusive: இன்னும் 5 மாசத்துல கல்யாணம்.. அதுக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சே.. சிங்கப்பூரில் உயிரிழந்த தமிழக ஊழியர் – 2 வாரிசுகளை பறிகொடுத்து நிற்கும் தாய்!

சிங்கப்பூரில் இந்த ஆண்டு இதுவரை 30 தொழிலாளர்கள் பணியிடத்தில் நடத்த விபத்தில் மாண்டுள்ளனர். குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இரண்டு தமிழக தொழிலாளர்கள் பணியிடத்தில் நடந்த விபத்தில் இறந்துள்ளனர்.

சிங்கப்பூரின் Choa Chu Kang பகுதியில் உள்ள ஒரு Build-To-Order (BTO) திட்ட பணியிடத்தில் கடந்த (ஜூலை 7) forklift விபத்தில் ஒரு தமிழக கட்டுமானத் தொழிலாளி மகேஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிங்கப்பூர் மனிதவளத் துறை அமைச்சகம் (MOM) கூறுகையில், 571-யூனிட் கீட் ஹாங் வெர்ஜ் BTO Project அமைந்துள்ள கீட் ஹாங் லிங்கில் (Keat Hong Link) Site-ல் விபத்து ஏற்பட்டதாக குறிப்பிட்டது.

Forklift வாகனத்தின் பின்புற counterweight-ல் நின்று கொண்டு, overhead beam-ல் மின் கேபிளை அந்த ஊழியர் கட்டிக் கொண்டிருந்த போது, திடீரென அந்த வாகனம் பின்னோக்கி நகர்ந்துவிட்டது. இதில், forklift-ன் Canopy மற்றும் beam-க்கு இடையில் அந்த ஊழியர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிங்கப்பூரில் இன்று இரவு நடக்கும் Toto Draw.. S$10,00,000 வெல்ல வாய்ப்பு – அடுத்த 4D Draw நடக்கும் தேதியும் அறிவிப்பு!

இந்நிலையில் சிங்கப்பூரில் இறந்த தமிழக தொழிலாளி மகேஷ் குறித்து பல தகவல்களை நமது தமிழ் சாகா செய்தி குழுவிற்கு மகேஷின் உறவினர் ஒருவர் பகிர்ந்து கொண்டார்..

அவர் அளித்த தகவலின்படி, மகேஷ் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர், இவருக்கு சதீஷ் என்ற அண்ணனும், பிரகாஷ் என்ற தம்பியும் உண்டு. சென்ற ஆண்டு தான் மகேஷின் தம்பி பிரகாஷ் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். தம்பியின் மரணம் மகேஷின் குடும்பத்தையே உலுக்கியது.

அதன் பிறகு தான் மகேஷ் அவர்களுக்கு பெண் பார்க்கும் படலம் துவங்கியது, இந்த 2022ம் ஆண்டு முடிவதற்குள் நிச்சயம் மகேஷிற்கு திருமணம் செய்துவிட வேண்டும் என்று அந்த குடும்பமே ஆசைப்பட்டது. மாப்பிளை நல்ல இடத்தில் வேலை செய்கின்றார் என்பதால் வரங்களும் அதிக அளவில் வந்துள்ளது.

ஆனால் இந்த சூழலில் தான் மகேஷ் கடந்த ஜூலை 7ம் தேதி சிங்கப்பூரில் தனது பணியிடத்தில் வேலைபார்த்து வந்த நிலையில் உடல் நசுங்கி பலியாகியுள்ளார். இளைய மகனை ஏற்கனவே இழந்து, தற்போது தனது இரண்டாவது மகனையும் இழந்த அந்த தாய் பரிதவித்து வருகின்றார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts