TamilSaaga

பறந்து கொண்டிருக்கும் பொழுதே துண்டாக கழண்டு விழுந்த விமானத்தின் கதவு… சாவை கண்முன் கண்ட பயணிகள்!

எவ்வளவுதான் டெக்னாலஜி வளர்ந்து விட்டாலும் விமான பயணம் என்றாலே எல்லாருக்கும் பயமூட்டும் ஒன்றாக தான் தற்பொழுதும் இருந்து வருகின்றது. ஏனென்றால் திடீரென்று விமானத்தில் ஏற்படும் கோளாறுகள் அறிவியலையும் மிஞ்சும் ஒன்றாக விதி வசப்படி நடப்பது தான் அதற்குக் காரணம். அப்படி ஒரு சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்திருக்கின்றது.

அமெரிக்காவை சேர்ந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் விமானத்தின் ஆறு பணியாளர்கள் மற்றும் 174 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த பொழுது கதவு துண்டாக கழண்டு விழுந்து பறந்துள்ளது. அதன் பின்னே சில நொடிகளில் கதவிற்கு அருகில் இருந்த சீட்டும் பறந்துள்ளது. அந்த சீட்டில் பயணிகள் யாரும் உட்காராத காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

விமானம் 16,000 அடி உயரத்தில்’ பறக்கும் பொழுது சம்பவம் ஏற்பட்ட காரணத்தினால் உடனடியாக விமானம் அருகிலுள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமான கதவு கழண்டு விழுந்ததும் உடனடியாக காற்று கேபினுக்குள் காரணத்தினால் ஏற்பட்ட விசையின் காரணமாக பயணிகள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தனர். அதிலும் சிலர் நாங்கள் இறந்து விடப் போகின்றோம் என்று நினைத்ததாக கூறியுள்ளனர். ஆனால் பைலட்டின் சமயோசித செயலின் காரணமாக பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Related posts