TamilSaaga

தமிழகத்தில் 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு..!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் நவம்பர் 16ஆம் தேதி ஒன்பதரை மணியளவில் வெளியிட்டார். தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்வுகள் வருவதை ஒட்டி பொது தேர்வுகளை ஆகவே நடத்தி முடிக்கும் நோக்கில் அட்டவணையானது முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் முன்னதாகவே நடத்தப்பட்டாலும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அதற்கு ஏதுவான வகையில் ஒரு தேர்விற்கும் மற்றொரு தேர்விற்கும் இடையில் போதுமான அளவு இடைவெளி விட்டு அட்டவணை இடப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தயாராவது சிரமம் இருக்காது என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு வெளியிட்டுள்ள அட்டவணையின் படி பத்தாம் வகுப்புக்கு ஆனது மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெறும் எனவும், பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4ம் தேதி தேர்வு தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 1ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி மார்ச் 22 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிராக்டிகல் தேர்வானது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கும் எனவும், பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் எனவும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 12-ல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணைகளை மட்டுமல்லாமல் முடிவுகள் வெளியிடும் தேதியும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும்,பத்தாம் வகுப்பிற்கு மே பத்தாம் தேதி வெளியிடப்படும் எனவும் பதினொன்றாம் வகுப்பிற்கு மே 14ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts