TamilSaaga

சிங்கப்பூரில் சீன இளைஞர்கள் கைவரிசை… சினிமா பாணியில் நடந்தேறிய திருட்டு!

வித விதமாக நகைகளை நாம் சினிமாக்களிலும், செய்திகளிலும் கேள்விப்பட்டிருப்போம். சிங்கப்பூரில் அதேபோன்ற சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.சிங்கப்பூரில் அடகு கடைக்கு சென்ற சீனாவை சேர்ந்த நபர் அங்குள்ள வைர மோதிரத்தை திருடிய சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.சிங்கப்பூரில் உள்ள வேல்யூ மேக்ஸ் எனப்படும் அடகு கடை ஆனது மிகவும் பிரபலமான அடகு கடையை ஆகும். அதில் சீனாவை சேர்ந்த இரண்டு பேர் நகையை அடகு வைக்க வேண்டும் என ஜூலை பன்னிரண்டாம் தேதி அதில் வைக்கப்பட்டுள்ள வைர மோதிரத்தை பற்றி அங்கு வேலை பார்க்கும் ஊழியரிடம் விசாரித்தனர்.

மூன்று கேரட் எடை கொண்ட பெரிய வைர மோதிரம் மற்றும் சிறிய வைர மோதிரத்தை பற்றி விலை விசாரித்துக் கொண்டிருக்கும் பொழுது பெரிய மோதிரத்தை பையில் நைசாக போட்ட வாலிபர் சிறிய மோதிரத்தை வாங்க விருப்பம் தெரிவிப்பதாக கடை ஊழியரிடம் கூறியுள்ளார். விலையை சரி பார்ப்பதற்காக ஊழியர் உள்ளே சென்ற பொழுது அந்த இடத்தை விட்டு இருவரும் உடனடியாக நகர்ந்து சென்றனர். அவர்களின் செயல்பாடுகள் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவு ஆகியது. உடனடியாக மலேசியாவிற்கு தப்பிச்சென்ற அவர்களை மலேசியா போலீஸ் உதவி உடன் சிங்கப்பூர் போலீசார் கைது செய்தனர்.மேலும் நகையை திருடிய வாலிபர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts