TamilSaaga

அரைவயிறு சாப்பிட்டு ஆளாக்கிய பெற்றோர்.. இன்று ஊரே பெருமைகொள்ள சாதித்த சரவணன் – IAS தேர்வில் வெற்றி பெற்று சாதனை!

சாதனைகள் எப்போது பிறக்கிறது? சோதனைகளை சந்தித்து வெற்றி கண்டால் மட்டுமே அது சாதனையாக மாறுகிறது என்று பலர் கூற கேள்விப்பட்டிருப்போம். அது எவ்வளவு உண்மை என்பதை நிரூபித்துள்ளார் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரவணன்.

தமிழ் வழியில் IAS தேர்வு எழுதி அதில் வெற்றிபெற்றுள்ள சரவணன் ஈரோடு மாவட்டம் பவானி என்று ஊரை சேர்ந்தவர். அவருடைய தாய் தந்தை இருவருமே கூலி தொழிலாளர்கள் தான். இளம் வயது முதலே பெற்றோரின் கடின உழைப்பில் தான் அவர்கள் குடும்பம் நகர்ந்துள்ளது.

ஆனால் என்றுமே எங்கள் குடும்பத்தின் ஏழ்மை, எனது வெற்றிக்கு எந்தவிதத்திலும் தடையாகிவிடக்கூடாது என்பது எனது எண்ணமாக இருந்தது. படிப்பு மட்டுமே எனக்கு வெற்றியை தரும் என்ற எண்ணத்தோடு தினமும் படித்தேன், 10ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற நான் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றேன் என்றார் சரவணன்.

உடனே எங்கள் ஊர் அருகில் இருந்த ஒரு தனியார் பள்ளி 11ம் மற்றும் 12ம் வகுப்பில் நான் இலவசமாக பயில உதவியது.. 12ம் வகுப்பு பொதுத்தேர்விலும் முதல் மதிப்பெண் பெற்று எனது குடும்பத்திற்கு பெருமை சேர்த்தேன்.

சிங்கப்பூரில் இதுவே முதல் முறை.. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக லிட்டில் இந்தியாவில் உதயமாகும் “புதிய சேவை” – “தமிழ் மொழியிலும் சேவை உண்டு”!

ஆனால் அதற்கு அடுத்து படிக்க வசதியில்லை, என் பெற்றோரை கஷ்டப்படுத்த மனமும் இல்லை, மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். அப்போது தான் அன்றைய தமிழக முதல்வர் படிக்க வசதி இல்லாத மாணவர்கள் கல்லுரியில் சேர்ந்து படிக்க சலுகைகளை வழங்கினார்.

அரசின் உதவியால் சென்னையில் உள்ள பிரபல கல்லுரி ஒன்றில் Aeronautics படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. Aeronautics துறையை நான் தேர்ந்தெடுக்க ஒரே காரணம் அய்யா அப்துல் கலாம் தான் என்கிறார் சரவணன், பொறியியல் படிப்பிலும் வெற்றி. பெங்களுருவில் TCS நிறுவனத்தில் 50 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.

2 ஆண்டுகள் நல்ல முறையில் அங்கு பணி செய்தேன், ஆனால் சிறு வயது முதலே என்னுள் இருந்த IAS கனவு என்னை உறங்கவிடாமல் உறுத்தியது. ஆனால் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் என் குடும்பம் நான் அளிக்கும் அந்த சம்பள பணத்தில் தான் இயங்கி வந்தது, அதனால் வேலையை விட்டு IAS படிக்கவும் மனமில்லை.

அப்போது தான் என் சகோதிரியும் அவரது கணவரும் இணைந்து என்னை வேலையை விட்டுவிட்டு IAS தேர்வுக்கு தயாராகச் சொல்லி வற்புறுத்தினார்கள். என் தந்தையோ குடும்பத்தை பார்த்துக்கொள்ள நான் இருக்கிறேன் நீ நினைத்ததை சாதிக்க வேண்டும் ஆகவே IAS தேர்வுக்கு தயாராகு என்றார்.

“புலம்பெயர் தொழிலாளர்களும் என் சொந்தங்களே” : வீட்டில் நடந்த Hari Raya கொண்டாட்டங்கள் – தொழிலாளர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த சிங்கப்பூரர்!

இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு படித்தேன், தற்போது தமிழ் வழியில் தேர்வு எழுதி IAS பாஸ் செய்துள்ளேன். இன்றளவும் எங்கள் ஊரில் IAS என்றால் யாருக்கும் என்னவென்றே தெரியாது. கலெக்டர் என்று கூறினால் தான் அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

அனுதினமும் கஷ்டப்படும் ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்து இன்று IAS தேர்வில் வெற்றி பெற்று சாதித்துள்ளேன். எனது குடும்பம் எனக்காக எவ்வளவோ தியாகங்களை செய்துள்ளனர். இந்த வெற்றியை அவர்களுக்கே சமர்ப்பிக்கிறேன் என்றார் சரவணன்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts