சிங்கப்பூரில் உணவு விநியோக நிறுவனமான டெலி ஹப் கேட்டரிங் என்ற நிறுவனம் தயார் செய்த உணவினை சாப்பிட்ட 21 பேருக்கு இரைப்பை சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டதாக வந்த புகார் வந்ததை அடுத்து அந்நிறுவனத்திற்கு 4000 சிங்கப்பூர் டாலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், அந்த நிறுவனத்தின் உணவை சாப்பிட்டவர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து சுகாதார அமைச்சகம் மற்றும் சிங்கப்பூரின் உணவு அமைப்பு ஆகியவை ஒன்றாக சேர்ந்து அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டன.
பாதிக்கப்பட்டவர்களில் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்ற போதும் மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. எனவே உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, முறையான ஒழுங்கு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உணவு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் உணவு வழங்கும் நிறுவனங்கள் தங்களது வளாகங்களை தூய்மையாக வைத்திருப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது. பாதுகாப்பான உணவு பொதுமக்களுக்கு கொடுக்கப்படவில்லை என்றால் அரசு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்துள்ளது.
அதை மீறியும் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 5000 சிங்கப்பூர் டாலர் அபராதமாக விதிக்கப்படலாம் எனவும் குற்றம் நிரூபனமான பின்பும் தொடர்ந்து குற்றச்சரில் ஈடுபட்டால் ஒரு நாளுக்கு நூறு டாலர் வீதம் அபராதம் அதிகரித்துக் கொண்டே செல்லும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூரில் வேலை செய்யும் தமிழக ஊழியர்களே நீங்கள் வெளியில் உணவு உட்கொள்ளும் பொழுது கவனமாக. உட்கொள்ளுங்கள்.