TamilSaaga

“உலகிலேயே யார் அதிகமான சோம்பேறி?” 26 நாட்களாக தொடரும் போட்டி… ரூல்ஸ் கேட்டா உங்களுக்கே காமெடியா இருக்கும்!!

ஐரோப்பா கண்டத்தில் இருக்கும் ஒரு குட்டி நாடு தான் மாண்டனக்ரோ. அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையை 6 லட்சம் தான். பால்கன் மலைக்கு அருகில் அமைந்துள்ள அந்த நாடு எழில் கொஞ்சும் சின்ன சின்ன கிராமங்களை கொண்டுள்ளதாகும். ஆண்டிற்கு ஒரு முறை அந்த குட்டி நாட்டில் வித்தியாசமான போட்டி நடைபெறுவது வழக்கம். எனவே இந்த ஆண்டு உலகிலேயே யார் அதிக சோம்பேறி என்ற பட்டத்திற்கான போட்டி மும்மரமாக நடைபெற்று வருகின்றது.

கடந்த மாதம் தொடங்கிய இந்தப் போட்டி தற்பொழுது 26 நாட்களை எட்டியுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்ப அவர்களின் விதிமுறைகளை கேட்டால் நமக்கே வினோதமாக இருக்கும். அதாவது போட்டியில் பங்கேற்பவர்கள் 24 மணி நேரமும் படுக்கையிலேயே படுத்திருக்க வேண்டும். அவர்கள் எழுந்து நடப்பதற்கோ அல்லது உட்காருவதற்கோ அனுமதி கிடையாது. அதாவது ஒருவர் எத்தனை நாட்கள் படுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே இந்த போட்டியின் சாராம்சம். கடைசிவரை யார் படித்துக் கொண்டே சமாளிக்கின்றார்களோ அவர்கள் தான் சோம்பேறி காண பட்டத்தை பெறுவார்கள்.

ஆரம்பத்தில் 21 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு நபர்களாக வரிசையாக விலகிய நிலையில் தற்போது ஏழு பேர் மட்டுமே மீதமுள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் உணவு, குளிர்பானம் போன்ற எதுவாக இருந்தாலும் படுத்துக் கொண்டே தான் உண்ண வேண்டும். 8 மணி நேரத்திற்கு ஒருமுறை கழிப்பறை செல்வதற்கு மட்டும் பத்து நிமிடங்கள் அனுமதிக்கப்படுவார்கள். முதலில்,ஜாலியாக தொடங்கிய இந்த போட்டி இப்பொழுது வருட வருடம் நடைபெற்று வருகின்றது.

Related posts