TamilSaaga

“தன் உயிரை கொடுத்து காப்பாற்றிய நட்பு” ..நண்பரின் காலை சுற்றிய பாம்பு… காப்பாற்றச் சென்ற பொழுது உயிரை விட்ட நண்பர்!!

நண்பரின் காலில் பாம்பு சிக்கிக் கொண்டு அவரை கொத்த முயன்ற பொழுது அவருக்கு ஒன்றும் ஆகி விடக்கூடாது என்பதற்காக காப்பாற்றச் சென்ற நண்பர் உயிரிழந்துள்ள சம்பவம் ஆஸ்திரேலியாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள கூமளா என்ற ஊரில் இந்த சம்பவம் நடந்தேறி இருக்கின்றது.

அந்த கிராமத்தில் உள்ள பள்ளி தொடங்கி நூறாண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக இரு நண்பர்கள் அங்கு சென்றுள்ளனர். அப்பொழுது ஒரு நண்பரின் காலில் பாம்பு சிக்கிக் கொண்டு அவரை கொத்த முயற்சித்தது. இதனால் அருகில் இருந்த நண்பர் வேகமாக பாம்பை துரத்த முயன்ற பொழுது பாம்பு அவரைக் கொத்தியது.

உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது அடுத்து மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை காப்பாற்ற முயன்ற பொழுது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்று கூறினர். இந்நிலையில் தன் நண்பரை காப்பாற்றுவதற்காக உயிரிழந்த நண்பரைக் கண்டு சுற்றி இருந்தால் நெகிழ்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Related posts