பொதுவாக இந்தியாவில் ஒரு வருடத்திற்கு இரண்டரை லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினால் வருமான வரி செலுத்த வேண்டும் என்பது சட்டமாகும். ஆனால் நாம் சிங்கப்பூரில் இதைவிட அதிகம் சம்பளம் வாங்குகின்றோமே அப்படியானால் இன்கம் டேக்ஸ் இந்தியாவில் செலுத்த வேண்டுமா? என்ற சந்தேகம் நம் அனைவருக்கும் இருக்கும்.
அதற்கான தெளிவான விடையை தான் நான் இப்போது பார்க்க போகின்றோம். ஜூலை 31 க்குள் இன்கம் டேக்ஸ் படிவத்தை பூர்த்தி செய்து அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தகவல் வந்து கொண்டிருப்பதால் இந்த தகவலை இப்பொழுது உங்களிடம் ஷேர் செய்வது உபயோகமாக இருக்கும்.
சிங்கப்பூர் வருமானம் மட்டும் இருந்தால் இந்தியாவில் நாம் வரி செலுத்த தேவையில்லை. ஆனால் வருமான வரி படிவத்தை பூர்த்தி செய்து அதில், கட்ட வேண்டிய தொகை 0 என்று மதிப்பிட்டு அரசாங்கத்திடம் ஒப்படைத்தால் அந்த ஆவணம் நமக்கு உபயோகமாக இருக்கும். அதாவது ஆவணத்தில் நான் வெளிநாட்டில் வேலை பார்க்கின்றேன் என்ற விவரத்தை பூர்த்தி செய்து, வரி செலுத்த வேண்டிய இடத்தில் பணத்தின் மதிப்பினை ஜீரோ என்று மதிப்பீட்டால் போதுமானது.
ஆனால் நீங்கள் சிங்கப்பூரில் சம்பாதித்த வருமானத்தின் மூலம், நம் நாட்டில் ஏதாவது தொழில் செய்து அதன் மூலம் வருமானம் வந்தாலோ அல்லது வீடு அல்லது கடை கட்டி, அதன் மூலம் வாடகை தொகை வந்தாலோ அது இந்திய நாட்டின் வருமானத்தின் கீழ் வரும். அப்பொழுது அந்த தொகையானது வருடத்திற்கு 2.50 லட்சத்திற்கு அதிகம் இருந்தால் மட்டும் நீங்கள் வருமான வரி செலுத்தினால் போதுமானது.
இந்தியாவில் வருமானம் இல்லாமல் நான் ஏன் வருமான வரி படிவத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கேள்வி உங்களில் எழலாம். நீங்கள் பிற்காலத்தில் ஏதாவது லோன் வாங்குகின்றீர்கள் என்றால், வங்கிகளில் கடைசி மூன்று ஆண்டுக்கான வருமான வரி தாக்குதலை ஒப்படைக்க சொல்லி கேட்பார்கள். அப்பொழுது இந்த ஆவணம் உங்களுக்கு கை கொடுக்கலாம்.
அதனால், முறையாக படிவத்தை பூர்த்தி செய்து கொண்டு அதற்குரிய ஆவணத்தை அரசாங்கத்திடமிருந்து பெற்று நீங்கள் வைத்துக் கொள்வது மிகவும் சிறந்தது.
News Source: நந்தனா டிராவல்ஸ் ஏர் டிராவல்ஸ்,
திருச்சி விமான நிலையம்,
திருச்சி-622007
9791477360