TamilSaaga

“பசியால் அழுத குழந்தை” .. கடையில் திருடிய பெண்.. மடக்கிபிடித்த சிங்கப்பூர் போலீஸ்! குழந்தைக்காக என்றாலும் ஒரு அளவு வேண்டாமா? அதற்கும் இப்படியா?

குழந்தை பசியால் துடித்தால் தாய் பட்டினி இருந்தாவது குழந்தைக்கு உணவு அளிப்பாள் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. இன்னும் சொல்ல போனால் நாம் அதனை நம் வாழ்க்கையில் உணர்ந்திருப்போம்.
இதுபோன்று சற்றே வித்தியாசமான சம்பவம் சிங்கப்பூரில் அரங்கேறி இருக்கின்றது.

இந்தோனேசியாவை சேர்ந்த சிந்தியா என்ற பெண் 30 நாள் டூரிஸ்ட் விசாவில் சிங்கப்பூருக்கு வருகை தந்திருந்தார். அவர் தன் குழந்தைக்கு கொடுப்பதற்காக பால் பவுடரை ஒரே நாளில் வரிசையாக மூன்று கடைகளில் திருடியுள்ளார். மேலும் அழகு சாதன பொருட்கள் விளையாட்டு சாமான்கள் போன்றவற்றையும் சேர்த்து திருடியுள்ளார்.

அவர் ஒரே நாளில் 15 டின் பால் பவுடர்னை திருடினார் என்பது தெரியவந்தது மூன்றாவது கடையில் திருடும்போது பிடிபட்ட பெண்ணிடம் மேலும் சில விளையாட்டு சாமான்களும் கைப்பற்றப்பட்டன. குழந்தைக்காக திருடினாலும் ஒரே நாளில் 15 டின்களை ஏன் திருட வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது.

இதையொட்டி அந்த பெண்ணிடம் விசாரித்த பொழுது தன் குழந்தை பசியால் துடித்ததாகவும் அதனால் குழந்தைக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பால் பவுடரை திருடியதாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரிவித்தார். கடந்த மாதம் 28ஆம் தேதி சிந்தியா பிடிபட்ட நிலையில் மூன்று வார சிறை தண்டனை அவருக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று தன் குழந்தைக்காக மட்டுமே திருடியதாகவும் வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்தார். குழந்தைக்காக திருடினாலும் “குற்றம் குற்றமே” என்று சிங்கப்பூர் நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில் திருட்டுச் சம்பவத்துக்கு அந்நாட்டில் வழங்கப்படும் அதிகபட்ச தண்டனையான 7 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நம் நாடுகளில் கொலை சம்பவங்களில் ஈடுபட்டவர்களும் தெருக்களில் கம்பீரமாக நடமாடும் பொழுது, குழந்தைக்காக பால் பவுடர் திருடினாலும் குற்றம்தான் என்ற சிங்கப்பூர் நீதிமன்றத்தின் நடுநிலைமை பாராட்டத்தக்கது.

மேலும் குழந்தைக்காக திருடினாலும் ஒரே நாளில் அத்தனை டின்களை திருட தேவையில்லை என்றும், அழகு சாதன பொருட்களையும், விளையாட்டு சாமான்களையும் ஏன் திருட வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related posts