TamilSaaga

குடும்ப சூழல் காரணமாக படிக்க முடியலையா? சிங்கப்பூரில் வேலை கிடைப்பது கடினமா இருக்கா? ஏஜெண்ட்டுக்கு பணம் கொடுக்காமல் சிங்கப்பூரில் வேலை பெறுவதற்கான “10 வழிகள்”!

SINGAPORE: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழல்… ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு நிலைமை.. இதனால் தான் பலரும் படிக்க ஆசையிருந்தும் படிக்க முடியாமல் சாதாரண வேலையில் இன்று கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

இப்படிப்பட்டவர்களுக்கு சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளில் கிடைக்கும் வேலைகள் தான் ஆறுதலாக அமைகிறது. குடும்பத்தைப் பிரிந்து இருப்பது, படித்ததற்கு சம்பந்தமே இல்லாமல் வேலைப் பார்ப்பது, அதிக நேரம் வேலை பார்ப்பது என்று பல இன்னல்கள் இருந்தாலும், வீட்டிற்கு மாதம் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பணம் அனுப்பும் போது கிடைக்கும் சந்தோஷம், அந்த கவலைகளை மறக்கடிக்க செய்கிறது.

சரி.. இப்படி குடும்ப சூழல் காரணமாக படிக்க முடியாதவர்கள், ஏஜெண்டுகளிடம் பணம் கொடுக்காமல் வேலைக்கு முயற்சி செய்தால் பலன் அளிக்குமா? வேலை கிடைக்குமா? என்றால்.. ‘ஆம்! நிச்சயமாக’ என்று உறுதியாக சொல்லலாம். போராடாதவர்களும், உழைக்க தயாராக இல்லாதவர்களும் வாய்ப்பில்லை என்று சொல்வார்கள். ஏனெனில், அவர்களுக்கு கடன் வாங்கியாவது ஏஜெண்டுக்கு பணத்தை கொடுத்துவிட வேண்டும். அவர் வேலை வாங்கிக் கொடுத்து விடுவார். நோகாமல் கைக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கிடைக்கும் என்று நினைப்பார்கள். ஆனால், அவர்களுக்கே தெரியாது, வேலைக்காக வாங்கிய அந்த கடனை 3 வருடம் வேலைப்பார்த்து அவர்கள் அடைக்க வேண்டும் என்று. பிறகு எங்கிருந்து சேமிப்பது!? இதனால் தான் ஏஜெண்ட் இல்லாமல் நாமே நேரடியாக சிங்கப்பூரில் வேலைக்கு அப்ளை செய்ய வேண்டும் என்று சொல்கிறோம்.

மேலும் படிக்க – ஏஜெண்ட் ஏமாற்றுகிறாரா?.. ஒரு ரூபாய் விடாமல் மொத்த பணத்தையும் திரும்பப் பெறுவது எப்படி?

கீழே நாங்கள் கொடுத்துள்ள வெப்சைட்டுகள் அனைத்தும் சிங்கப்பூரில் நீங்கள் ஒரு நல்ல வேலை பெறுவதற்கு நிச்சயம் உதவும். இதில், உங்கள் படிப்புக்கு ஏற்ற, நீங்கள் விரும்பும் வேலையை தேர்வு செய்து அப்ளை செய்ய முடியும். உங்கள் நல்ல நேரம், நீங்கள் விரும்பிய வேலை தொடர்பாக ஏதாவது ஒரு சிங்கப்பூர் நிறுவனம் Vacancy அறிவித்திருந்தால், நீங்கள் அதற்கு அப்ளை செய்ய முடியும். உங்கள் Resume அவர்களுக்கு ஏற்றதாக இருப்பின், நிச்சயம் உங்களுக்கு அழைப்பு வரும். அதன் பிறகு, நீங்கள் தேர்வு செய்யப்படுவது உங்கள் Performance மற்றும் உங்கள் திறமையைப் பொறுத்தது.

  1. JobsDB – https://sg.jobsdb.com/sg
  2. Indeed Singapore – https://www.indeed.com.sg/
  3. JobStreet Singapore – https://www.jobstreet.com.sg/
  4. Monster Singapore – https://www.monster.com.sg/
  5. LinkedIn – https://www.linkedin.com/jobs/
  6. Glassdoor – https://www.glassdoor.sg/index.htm
  7. Gumtree Singapore – https://www.gumtree.sg/s-jobs/v1c8p1
  8. Careers@Gov – https://www.careers.gov.sg/
  9. FastJobs – https://www.fastjobs.sg/
  10. STJobs – https://www.stjobs.sg/

அதேசமயம், நீங்கள் படித்திருந்தாலும் சரி… படிக்கவில்லை என்றாலும் சரி… Skilled test என்பது நீங்கள் சிங்கப்பூர் வருவதற்கான மிகச்சிறந்த வழி. சம்பளம் குறைவாக இருந்தாலும், கொஞ்சம் வேலை கடினமானதாக இருந்தாலும், தமிழகத்தில் உள்ள டாப் 10 நிறுவனங்களில் சேர்ந்து அங்கு டெஸ்ட் அடித்து, வேலையை கற்றுக்கொண்டு அவர்கள் மூலமே சிங்கப்பூரில் ஒரு நல்ல வேலையில் உங்களால் அமர முடியும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts