சிங்கப்பூரில் வொர்க் பாஸில் இருப்பவர்கள் தாங்கள் படித்து விட்டு போன துறைகளில் அப்படியே வேலை பார்க்காமல் கொஞ்சம் கொஞ்சமாக கோர்ஸ் செய்து தங்களுடைய கல்வி தகுதியை அதிகம் செய்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
டிகிரி படித்து விட்டு சிங்கப்பூரில் வேலைக்கு நீங்கள் தேடும் போது SPassல் வேலை வரலாம். இதற்கு அடிப்படையாக சம்பளம் சமீபத்தில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பரில் இருந்து 3000 சிங்கப்பூர் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
என்ஜினியரிங் முடித்து விட்டு engineerஆக வேலை தேடி கொண்டு இருந்தால் உங்களுக்கு கண்டிப்பாக Excel மற்றும் AutoCadd தெரிந்து இருக்க வேண்டும். எந்த ஃபீல்ட் வருகிறீர்களோ அந்த cadd தெரிய வேண்டும்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் excavator operator ஆக என்ன செய்யலாம்.. 2000 சிங்கப்பூர் டாலர் சம்பளமா கிடைக்குமா? இத தெரிஞ்சிக்கோங்க லைஃப் செட்டில் தான்!
மெக்கானிக்கல் இன்ஜினியராக படித்து இருந்தால் நீங்க தேர்வு செய்ய வேண்டியது Marine Shipyardஐ துறையை தான். NTD கோர்ஸ் முடிக்க வேண்டும். இதற்கு சம்பளமாக 4000 சிங்கப்பூர் டாலர் வரை கூட கிடைக்கும். சிவில் படித்தவர்கள் construction துறைகளில் பணிக்கு சேர வேண்டும். சிவில் படித்தவர்கள் RTO(Residential technical officer) கோர்ஸ் செய்யலாம்.
இதற்கு 5000 சிங்கப்பூர் டாலர் சம்பளம் கொடுக்கப்படும். சரி டிகிரி அல்லது டிப்ளமோ முடித்து சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட்டில் இருந்தால் நீங்க SPassக்கு மாறிவிட என்ன செய்யலாம்?
இதற்கு ரொம்பவே முக்கியம். லைசன்ஸ் எடுக்க வேண்டும். லைசன்ஸ் எடுத்தால் டிரைவராக வேலைக்கு போக வேண்டும் என்பது இல்லை அது ஒரு கோர்ஸ் மாதிரி உங்களுக்கு செயல்படும். கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் இருப்பவர்கள் Safety supervisior கோர்ஸ் செய்யலாம். இதற்கு 250 சிங்கப்பூர் டாலர் மட்டுமே கட்டணமாக இருக்கும். Safety courseல் தொடர்ந்து மேலும் சில கோர்ஸ்கள் முடித்தாலும் அதை வைத்து வொர்க் பாஸை SPassஆக மாற்றிக்கொள்ள முடியும்.
இதில் லைசன்ஸ் எடுக்க கம்பெனியின் ஒப்புதல் தேவைப்படும். மற்ற எந்த கோர்ஸ் படிக்கும் போதும் கம்பெனி ஒப்புதல் தேவையில்லை.
இதையும் படிங்க: ஃபெப்ரவரியில் சிங்கப்பூர் பறக்க இருக்கீங்களா… பொட்டியில இந்த டாக்குமெண்ட்ஸ் இருக்கா? ஒன்னு விட்டாலும் பின்ன வருத்தப்படுவீங்க மக்களே!
சிங்கப்பூரில் 10வது படித்து விட்டு சிங்கப்பூரில் ஒரு வருடம் டிப்ளமோ கோர்ஸ் முடித்தாலே உங்களுக்கு spass கிடைக்கும். சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், வெப் டெக்னாலஜி ஆகிய கோர்ஸ்கள் முடித்தால் உங்களுக்கு 3000 சிங்கப்பூர் டாலர் வரை படிப்புக்கு செலவுகள் இருக்கும்.
இதன்மூலம் நீங்க சிங்கப்பூர் வேலைக்கு வரும்போது உங்களுடைய கல்வி தகுதியை வைத்து இருக்கும் கோர்ஸ்களை முடித்து தொடர்ந்து பணி உயர்வுடன் நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைக்கும்.