TamilSaaga

அவங்க வேலை செய்றதால மனுஷி இல்லையா??!! உங்களுக்கு மனசாட்சியே இல்லையா… சிங்கப்பூர் குடும்பத்தின் மீது கடுப்பான நெட்டிசன்கள்… விவகாரத்தின் பின்னால் இருக்கும் வைரல் வீடியோ

சிங்கப்பூரில் தற்போது வீடியோ ஒன்று இணையத்தினை ஆக்ரமித்து இருக்கிறது. இதற்கு காரணமாக குடும்பத்தினரை எல்லாரும் வசைப்பாடி வருகின்றனர். அப்படி என்ன அது என்றால் தெரிந்து கொண்டால் உங்களுக்கும் கூட கோபம் வரலாம்.

ஜனவரி 19 அன்று Singapore Incidents என்ற பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியாகியது. அதில், “உங்கள் வீட்டுப் பணிப்பெண்ணின் உணவுக்கு பணம் கொடுக்க விரும்பவில்லை என்றால், அவரை வெளியில் அழைத்து வராதீர்கள்” என்ற தலைப்புடன் வெளியான வீடியோவில் முதலாளி குடும்பம் வகையாக சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். அருகில் அமர்ந்து இருந்த பெண் ஏக்கத்துடன் அதையெல்லாம் பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலைக்காக EPass இருக்கு தெரியும்.. அதென்னப்பா PE Pass… மாதம் இத்தனை லட்சத்தில் சம்பளமா? அம்மாடி! தெரிஞ்சிக்கோங்க உங்களுக்கு கூட கிடைக்கலாம்!

இளம் பணிப்பெண்ணின் மீது அனுதாபம் கொண்ட கோபமான நெட்டிசன்கள் அந்த குடும்பத்தினரை வசை பாடினர். 68,000 வியூஸை தாண்டி இருக்கும் அந்த வீடியோவில் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

சில கமெண்டில் பணிப்பெண்ணின் முதலாளி குடும்பத்தினை செம டோஸ் விட்டனர். அந்த பெண் தன்னுடைய வீட்டிலிருந்து வெகு தொலைவில் வேலை செய்கிறார். அவரும் மனிதர்களைப் போல நடத்தப்படத் தகுதியானவர்கள் என்று வாதிட்டனர்.

இதையும் படிங்க: சிங்கையில் இருந்து சொந்த ஊர் திரும்புறீங்களா? உங்க மனைவிக்கு தங்கத்தை அள்ளிட்டு போக செம வழி இருக்கு… இந்தியாவை விட 3000 ரூபாய் கம்மி! மிஸ் பண்ணிடாதீங்க

மேலும், ஒரு பெண் தான் வீட்டு வேலை செய்த இடத்தில் கூட இதே கஷ்டத்தினை பட்டு இருக்கிறேன். அவர்கள் எங்களுக்கு ஒரு காபி வாங்கி கொடுக்கக்கூட யோசிப்பார்கள். மேலும், தனது முதலாளி குடும்பத்தினரால் ஒரு விருந்துக்கு அழைத்து செல்லப்பட்டேன். அங்கே விதவிதமான உணவுகள் இருந்தது. ஆனால் முழு நேரமும் எதையும் நான் சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. பின்னர் இரவு தாமதமாக வீடு திரும்பி, நானே செய்து நூடுல்ஸ் சாப்பிட மட்டுமே முடிந்தது.

சிங்கப்பூர் அரச சார்பற்ற நிறுவனமான Humanitarian Organization for Migration Economics (HOME) கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, சிங்கப்பூரில் வெளிநாட்டில் இருந்து வீட்டு வேலைக்கு வந்திருப்பவர்கள் பலர் தங்கள் முதலாளியால் emotional abuseஐ சந்திப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts