வேலைக்கும் செல்லும் போது குடும்பத்துடன் ஈசியாக வீடு பார்த்து இந்தியாவில் செட்டில் ஆகிவிடலாம். இங்கு நீங்கள் வேலைக்கான பாஸில் வரும் போது உங்கள் குடும்பத்துடன் வர வேண்டும் என நினைத்தால் அதற்கு தான் இதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சிங்கப்பூரில் உங்களுக்கு வேலைக்கான பாஸ் வந்தவுடன் உங்களின் குடும்பத்துக்கு Dependent பாஸ் விண்ணப்பிக்கலாம். இதற்கு நீங்கள் வேலைக்கு சேர்ந்த நிறுவனத்தின் ஹெச் ஆரிடம் இதுகுறித்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அல்லது உங்களின் லோக்கல் ஏஜெண்ட் மூலமாகவோ உங்கள் குடும்பத்துக்கு விசா அப்ளே செய்ய முடியும். நீங்கள் சட்டப்படி திருமணம் செய்த மனைவி மற்றும் 21 வயதுக்குட்பட்டு இருக்கும் திருமணமாகாத பிள்ளைகளுக்கு dependent visa அப்ளே செய்ய முடியும்.
இதையும் படிங்க: நியூ இயர் வந்தாச்சு… Skilled test ரிசல்ட் என்னாச்சு… சிங்கையில் Skilled test..? வெளியான சில கள நிலவரங்கள்
குடும்பத்தினை அழைத்து வர சிங்கப்பூரில் நீங்கள் வாங்கும் சம்பளம் தான் முதல் தகுதியாக பார்க்கப்படுகிறது. $6000 சிங்கப்பூர் டாலர் அல்லது அதற்கு மேல் சம்பளம் வாங்கினால் உங்க குடும்பத்தினை Dependent விசாவில் இங்கு அழைத்து வர முடியும். ஏற்கனவே சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் சம்பளம் $6000 சிங்கப்பூர் டாலராக உயர்ந்தவுடன் கம்பெனியில் சொல்லி அவர்களுக்கும் Dependent விசா அப்ளே செய்ய சொல்லலாம்.
Dependent விசா அப்ளே செய்த 3 வாரங்களில் கொடுக்கப்பட்டு விடும். மனைவிக்கு அப்ளே செய்யும் போது பாஸ்போர்ட் மற்றும் அதிகாரப்பூர்வ திருமண சான்றிதழ் சமர்பிக்கப்பட வேண்டும். பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், பெற்றோரின் பாஸ்போர்ட் சமர்பிக்க வேண்டும். இந்தியாவில் பிறந்த 12 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளின் தடுப்பூசி விபரங்களையும் இந்த அப்ளிகேஷனில் சமர்பிக்க வேண்டும். இதற்கு அப்ளிகேஷன் நேரத்தில் $105 சிங்கப்பூர் டாலர் கேட்பார்கள். Dependent பாஸ் கிடைத்தவுடன் ஒவ்வொரு பாஸுக்கும் $225 சிங்கப்பூர் டாலர் கேட்கப்படும்.
Dependent விசாவில் வந்தால் கூட அவர்களால் இங்கு வேலை செய்ய முடியும். கல்வி தகுதிக்கு ஏற்ப Spass அல்லது Epassல் வேலை கிடைத்து விட்டால் உங்களின் dependent pass கேன்சல் செய்யப்பட்டு வேலைக்கான பாஸில் தொடர்ந்து சிங்கப்பூரில் இருக்கலாம். இதுவே வொர்க் பெர்மிட்டில் தான் வேலை கிடைத்து இருந்தால் dependent visaம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.
மேலும், இந்த பாஸில் இருப்பவர்களால் சிங்கையில் தொழில் தொடங்க கூட முடியும். சிங்கை மனிதவளத்துறையில் letter of consent கொடுத்து ஓகே ஆகும்பட்சத்தில் தொழில் செய்யலாம். சில காரணங்களால் Dependent விசா கேன்சல் ஆகிவிட்டால், SPass அல்லது Epassல் சிங்கப்பூர் வருபவர்கள் உங்க குடும்ப உறுப்பினர்களுக்கு Long-Term Visit பாஸ் அப்ளே செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.