வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் பலருக்கும் அங்கையே குடியுரிமை வாங்கி செட்டில் ஆக பெரிய ஆசையே இருக்கும். இதில் சிங்கப்பூரில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?
சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருக்கும் பலருக்கு இங்கையே செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படிப்பட்ட ஆசை உங்களுக்கும் இருந்தால் இங்கு PR வாங்க என்ன நடைமுறை இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
சிங்கப்பூரில் PRக்கு அப்ளே செய்ய உங்கள் கணவனோ அல்லது மனைவியோ சிங்கப்பூர் குடியுரிமை வைத்திருக்க வேண்டும். அல்லது அவர்கள் PR வைத்திருந்தால் நீங்களும் அப்ளே செய்து கொள்ளலாம். சிங்கப்பூர் சிட்டிசன் அல்லது PRன் திருமணமாகாத 21 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகள் அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் அப்ளே செய்ய இயலும். சிங்கப்பூர் குடியுரிமை வைத்திருப்பவர்களின் வயது முதிர்ந்த பெற்றோர்கள். E-pass அல்லது S-Pass வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், சிங்கப்பூரில் படிக்கும் மாணவர்கள் PRக்கு அப்ளே செய்ய முடியும்.
இந்த தகுதி உடையவர்கள் அப்ளே செய்யும் PRக்கு மேலும் சில கட்டுபாடுகளையும் சிங்கப்பூர் வைத்திருக்கிறது. சிங்கப்பூரில் சமூகத்தில் உங்களால் செட்டாக முடிகிறதா, குடும்பத்துடன் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்கிறீர்களா, தொண்டுநிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறீர்களா என்பதை பார்த்து தான் PR தற்போதைய காலத்தில் அப்ரூவ் செய்யப்பட்டு வருகிறது.
PRக்கு அப்ளே செய்யும் போது இணைக்கப்படும் உங்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 3 மாதத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். முக்கியமான Background வெள்ளையில் தான் இருக்க வேண்டும். மத அடையாளத்தை குறிக்கும் எந்த தலைபாகையும் அணிந்திருக்க கூடாது. உங்களின் முகம் தெளிவாக இருக்க வேண்டும்.
S-pass அல்லது E-Pass வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் PRக்கு அப்ளே செய்யும் போது உங்களின் பாஸ்போர்ட் குறைந்தது 6 மாத வேலிடிட்டி கொண்டிருக்க வேண்டும். உங்களுடைய பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கத்திற்கான ப்ரிண்ட் அவுட், பாஸின் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும், உங்களின் கல்வி தகுதிக்கான சான்று, முந்தைய நிறுவனங்களில் நீங்கள் எத்தனை மாதம் வேலை பார்த்தீர்கள் ஆகியவை அடங்கிய சான்று, 6 மாதம் சம்பள விபரங்கள், Controller of immigration officer பெறுநர் போட்டு உங்களின் தற்போதைய கம்பெனி, சம்பள விபரங்கள் அடங்கிய லெட்டர் வைத்திருக்க வேண்டியது அவசியம். Iras consent பார்ம் கொடுக்க வேண்டியதும் முக்கியமாகும்.
உங்களின் மனைவிக்கோ அல்லது கணவருக்கோ PR அப்ளே செய்யும் போது திருமண சான்றிதழை வைத்திருக்க வேண்டும். எல்லா சான்றிதழும் கண்டிப்பாக ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும்.
இதற்கு கட்டணமாக $100 சிங்கப்பூர் டாலர் கேட்கப்படும். இது உங்களின் PR கேன்சல் செய்யப்பட்டால் திருப்பி கொடுக்கப்படாது. e-service இணையத்தளம் மூலம் தான் அப்ளே செய்ய முடியும் என்பதால் சர்வீஸ் கட்டணமும் ஆன்லைனில் தான் உங்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் கட்ட முடியும். இண்டர்நெட் பேங்கிங் வைத்திருந்தால் அதன் மூலமாகவோ செய்யலாம்.
உங்களின் PR அப்ரூவ் செய்யப்பட்டவுடன், $150 சிங்கப்பூர் டாலர் கட்டணமாக கொடுக்க வேண்டும். இது உங்களின் அடையாள அட்டை, பெர்மிட் ஆகியவற்றுக்காக வாங்கப்படுகிறது. உங்களுடைய PR உடனே அப்ரூவ் செய்யப்படாது. குறைந்தது 6 மாதம் முதல் 8 மாதம் வரை நேரம் எடுக்கும். சில நேரங்களில் இதிலும் அதிகமாகும். உங்களுடைய PR அப்ரூவ் ஆகும்பட்சத்தில் நேரடியாக போஸ்ட் மூலம் வீட்டிற்கே அனுப்பப்பட்டு விடும். ICA இணையத்தளத்திலும் செக் செய்ய முடியும்.