TamilSaaga

“சிங்கப்பூரின் நியூட்டன் சர்க்கஸ்” : ரவுண்டானாவில் போக்குவரத்தை எளிதாக்க புதிய யு-டர்ன் – LTA

சிங்கப்பூரில் நியூட்டன் சர்க்கஸ் அருகே “U Turn” சாலையில் ஒரு புதிய யு-டர்ன் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 12) திறக்கப்பட்டது. இதனால் நெரிசலான ரவுண்டானாவைப் பயன்படுத்தாமல் டிரைவர்கள் உட்லேண்ட்ஸ்-புக்கிட் திமா சாலையில் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், நியூட்டன் சர்க்கஸில் கடந்த 2017ல் தொடங்கிய அனைத்து மேம்பாட்டுப் பணிகளும் நிறைவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மற்றொரு யூ-டர்ன், நியூட்டன் சர்க்கஸின் மறுபுறம், வாகன ஓட்டிகள் உட்லேண்ட்ஸ்-புக்கிட் திமா சாலையில் இருந்து நகரத்தை நோக்கி திரும்ப அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஜூலை மாதம் திறக்கப்பட்டது. 2016 மற்றும் 2018க்கு இடையில் வருடத்திற்கு சராசரியாக ஒன்பது விபத்துகளைப் பதிவு செய்த ரவுண்டானாவைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையை இவை குறைக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

பெருந்தொற்றிலிருந்து சற்று தாமதமாகிவிட்ட இந்த திட்டத்தை முடிப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் பயனடைவார்கள். இப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.யான கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் இராஜாங்க அமைச்சர் ஆல்வின் டான், இந்த புதிய யூ-டர்ன் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பாளர்கள், நியூட்டன் சர்க்கஸை சிறப்பாக வழிநடத்த உதவும் என்றார். மேலும் இது “கொஞ்சம் குழப்பமாக இருக்கும்” என்றும் அவர் கூறினார்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த யூ-டர்ன் கடந்த ஜூலை மாதத்தில் திறக்கப்பட யு-டர்னை விட போக்குவரத்தை குறைக்க உதவும் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டில், இந்த பாதையால் ஏற்பட்ட தாமதத்தைப் பற்றி மகிழ்ச்சியடையாத சில குடியிருப்பாளர்களை நான் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக, நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) நியூட்டன் சர்க்கஸில் பல்வேறு மாற்றங்களைச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts