TamilSaaga

சிம்பிள் ட்ரிக்கில் ஏமாந்த டாப் நிறுவனங்கள்… அசால்ட்டாக 70 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் ஆட்டையை போட்ட ஆசாமி… ஆனா கடைசியா கேட்டியே பாரு ஒரு கேள்வி!

2009ல் இருந்து தனது பட்டப்படிப்பை போலியாக தயாரித்து வந்த ஆசாமி மற்றொரு வேலைக்காக விண்ணப்பத்த போது கையும் களவுமாக சிக்கினார். இந்த தகவல் தற்போது இணையத்தில் சூடுபிடித்து இருக்கிறது.

55 வயதாகும் Yeoh Keng Swee NTU மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) போன்ற பல்கலைக்கழகங்களில் இருந்து பல்வேறு பட்ட சான்றிதழ்களை போலியாக உருவாக்கினார். அதை வைத்து பெரிய நிறுவனங்களில் நிர்வாக வேலைகளுக்கு மட்டுமல்லாமல் தலைமை நிதி அதிகாரி வேலைக்கு அப்ளே செய்திடுவார்.

அவருக்கு தேவைப்படும் டிகிரி சான்றிதழின் பிடிஎஃப்-ஐ இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்வார். அதனை ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு தன் பெயரை அதில் தேவையுள்ள இடங்களில் வைத்து அதை மீண்டும் ஜெராக்ஸ் எடுத்துக்கொள்வார். இந்த முறையில் அவருக்கு தேவையான எல்லா டிகிரி சம்மந்தப்பட்ட சான்றிதழும் வைத்திருப்பார்.

இதில் NTUல் வழங்கப்பட்டதாக இளங்கலை கணக்கியல் பட்டப்படிப்பு, வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் மற்றும் சான்றளிக்கப்பட்ட பயிற்சி கணக்காளர் என்றும் போலி சான்றிதழ் தயாரித்துள்ளார். இதை வைத்து Boon Chang Structure என்ற கம்பெனிக்கு ஈமெயில் மூலம் விண்ணப்பித்து இருக்கிறார்.

2019 செப்டம்பரில் வேலைக்கு அமர்த்தப்பட்டார். ஆனால் அவரிட்ன் நிர்வாகத்துக்கு திருப்தியாக இல்லை. இதனால் டிசம்பர் 2019 வேலையில் இருந்து நீக்கப்பட்டார். $14,324.75 சிங்கப்பூர் டாலர் அவருக்கு அந்த காலத்தில் சம்பளமாக வழங்கப்பட்ட மொத்த தொகையாக இருந்தது.

பின்னர் 2020 ஜனவரி மாதத்தில் Gain City என்ற நிறுவனத்தில் Yeoh நிதி இயக்குநராக வேலைக்கு அமர்த்தப்பட்டார். இந்த கம்பெனியிலும் அதே போலி ஆவணங்களை சமர்பித்தார். ஆனால் இங்கு அவரின் வேலை சரியாக இல்லை எனக் கூறி 6 மாதம் கழித்து ஜூன் மாதத்தில் வேலையில் இருந்து துரத்தப்பட்டார். தொடர்ந்து அங்கு அவருக்கு $51,258.46 சிங்கப்பூர் டாலர் மொத்த சம்பளமாக அவருக்கு வழங்கப்பட்டது.

இரண்டு கம்பெனியை ஏமாற்றிய நம்பிக்கையில் அவர் போனது மூன்றாவது கம்பெனியில் தான் சிக்கினார். Success Forever Construction and Maintenance என்ற நிறுவனத்தில் கன்ஸ்ட்ரக்‌ஷன் ப்ராஜக்ட் மேனேஜர் பணிக்கு விண்ணப்பித்தார். தனக்கு நேரமானதால் அசல் ஆவணங்களை கொண்டு வர இயலவில்லை எனக் காரணம் கூறிவிட்டார்.

தொடர்ந்து இரண்டு சுற்று நேர்காணலிலும் அவரால் போதுமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. இதனால் இவரின் சான்றிதழ்களை சரி பார்க்க வேண்டும் என அந்த நிறுவனத்தின் மேலாளர்கள் பேசிக்கொண்டதை கேட்ட Yeoh தனக்கு இந்த வேலையில் ஆர்வம் இல்லை எனக் கூறி சென்றார். போகும்போது தான் சமர்பித்த ஆவணங்களை அழிக்கும்படி கூறி சென்று இருக்கிறார்.

இதை தொடர்ந்து ஜனவரி 2021ல், அந்த நிறுவனத்திடம் இருந்து NTUவிற்கு சான்றிதழ் சரிபார்க்க அனுப்பட்ட கோரிக்கையின் பெயரில் பல்கலைக்கழகம் போலீஸில் ஒரு புகார் கொடுத்தது. Yeoh கொடுத்த அனைத்து சான்றிதழும் போலி என்பதே அது.

இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் நீதிபதியிடம் தன் பெயரை வெளியிடாமல் இருக்க கூறுங்கள். இதனால் என் குடும்பம் பாதிக்கப்படும் என்றார். ஆனால் அவருக்கு பதிலளித்த நீதிபதி இது பொது விசாரணை என்பதால் மீடியாக்களை தடுக்க முடியாது எனக் கூறினார். இதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts