TamilSaaga

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இந்திய ஊழியர்களே.. நாளை (அக்.30) முதல் மீண்டும் Start – விடியறதுக்குள்ள ஊருக்கு வந்துடுவேன்னு சொல்லிடுங்க!

SINGAPORE: Scoot விமானங்கள் Covid 19-க்கு முன்பாக, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தினம் இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. சிங்கப்பூரில் இருந்து இரவு 9.10 மணிக்கு எடுக்கப்படும் விமானம், திருச்சியில் இரவு 10.50 மணிக்கு வந்து சேரும். அதுபோல், இரவு 11 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து எடுக்கப்படும் இரண்டாவது விமானம், நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்சி வந்து சேரும்.

அதுபோல், திருச்சியில் இருந்து முதல் Return விமானம், இரவு 11.50 மணிக்கு முதல் விமானமும், நள்ளிரவு 1.30 மணிக்கு இரண்டாவது விமானமும் கிளம்பும். இதுதான் கொரோனாவுக்கு முந்தைய நடைமுறையாக இருந்தது.

கொரோனாவுக்கு பிறகு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஒரேயொரு விமானம் மட்டும் இயக்கப்பட்டு வந்த சூழலில், தற்போது மீண்டும் அந்த இரண்டாவது விமானத்தின் போக்குவரத்தை ஸ்கூட் நிறுவனம் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பையும் ஸ்கூட் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நாளை (அக்.30) முதல் இயக்கப்பட உள்ள இந்த விமானத்திற்கான புக்கிங் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் Pocket Money-க்காக Part Time விபச்சாரம் செய்த மாணவி.. வசமாக வந்து சிக்கிய வெளிநாட்டு ஊழியர் – பாஸ்போர்ட் முடக்கம்.. தமிழகத்தில் நின்று போன கல்யாணம்!

இதில் மிக முக்கியமான தகவல் என்னவெனில், இந்த ஸ்கூட் விமானம் NON REFUNDABLE TICKETS-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் டிக்கெட் புக் செய்துவிட்டு, Cancel செய்தால் பணம் Refund ஆகாது. அதேசமயம் பயண தேதியை மாற்ற வேண்டுமெனில் அபராதம் விதிக்கப்படும். தேதியை மாற்றுவதற்கு ஒரு கட்டணம் மற்றும் Fare Difference தொகையையும் கட்ட வேண்டியிருக்கும்.

எடுத்துக்கட்டாக ஒருவர் 10,000 ரூபாய்க்கு டிக்கெட் புக்கிங் செய்த பிறகு, பயண தேதியை மாற்ற வேண்டும் என்று விரும்பினால், Changing fees 4,500 ரூபாய் மற்றும் Fare difference 5,000 ரூபாய் என்று கிட்டத்தட்ட 9,000 ரூபாய் அளவுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதுதான் ticket date changing fees-ன் விதிகள். இனி எனவே, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன் மிக கவனமாக தேதியை சரிபார்த்து புக்கிங் செய்ய வேண்டும். இந்த கட்டணம் ஒருசில நாட்களில் குறைவாகவும், ஒருசில நாட்களில் மிகவும் அதிகமாகவும் இருக்கும்.

விமான டிக்கெட் முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ளவும்

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம், திருச்சி
96002 23091

Related posts