TamilSaaga

சிங்கப்பூரில் Pocket Money-க்காக Part Time விபச்சாரம் செய்த மாணவி.. வசமாக வந்து சிக்கிய வெளிநாட்டு ஊழியர் – பாஸ்போர்ட் முடக்கம்.. தமிழகத்தில் நின்று போன கல்யாணம்!

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்தை வளர்த்துக் கொள்ள எந்த அளவுக்கு சிங்கப்பூர் உதவி செய்யுமோ, அந்த அளவுக்கு தவறு செய்யும் பட்சத்தில் சித்ரவதையையும் கொடுத்துவிடும்.

அப்படியொரு மோசமான உண்மை சம்பவம் சரியாக 10 வருடத்திற்கு முன்பு, அதாவது 2012-ல் சிங்கப்பூரில் அரங்கேறியது. தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். வெளிநாட்டிற்கு சென்று பணம் சம்பாதித்து குடும்பத்தை மேம்படுத்த வேண்டும் என்று ஆசை. குறிப்பாக சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் என்பது கனவு.

அப்படி இப்படி என்று எல்லாம் தயார் செய்து, சிங்கப்பூரும் சென்றாகிவிட்டது. தொடக்கத்தில் கொஞ்சம் சிரமப்பட்டாலும், பிறகு மெல்ல மெல்ல தன் நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். மிகக்குறைந்த காலத்தில் அசுர வளர்ச்சியை எட்டினார். அவரது குடும்பத்தினரே, அவ்வளவு பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்கவில்லை.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், சுமாரான நிலையில் சிங்கப்பூர் வந்து, குறைந்த காலத்தில் பெரும் ஊதியம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார். இதனால், வீட்டில் மோகனுக்கு பெண் பார்க்கும் படலம் நடந்தது. பெண்ணும் பார்த்து, சம்மந்தமும் பேசி நிச்சயதார்த்தம் தேதி வரை முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்த தகவலும் மோகனுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது.

எல்லாம் நல்லபடியாக சென்றுக் கொண்டிருக்க, கையில் தாராளமாய் பணம் புரள, சிங்கப்பூரில் தனது நிறுவனத்தில் பணிபுரியும் சக ஊழியருடன் இணைந்து மோகன் ஹோட்டல் ஒன்றில் ரூம் புக் செய்கிறார். அந்த அறைக்கு ஒரு பெண் வர, ஒருவர் பின் ஒருவராக அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு மீண்டும் தங்கள் அறைக்கு திரும்பிவிட்டார்கள்.

மேலும் படிக்க – “சிங்கப்பூரில் உடைத்து எறியப்பட்ட வ.உ.சிதம்பரம் சிலை” – 1950-ல் நேரு சிங்கப்பூர் வந்து திறந்த “பொக்கிஷம்”!

இந்த சூழலில், சில நாட்கள் கழித்து ரெக்கார்டு செக் பண்ணும் பொழுது, குறிப்பிட்ட அறையில் இரு ஆண்களுடன் சில மணி நேரங்கள் செலவிட்ட பெண்ணின் வயது 18க்கும் குறைவு என்பது சிங்கப்பூர் காவல்துறைக்கு தெரியவருகிறது. உடனே மோகன் மற்றும் அவரது நண்பரை அழைத்து விசாரித்த போலீசார், மோகனின் பாஸ்போர்ட்டை முடக்கிவிட்டனர்.

ஏனெனில், சிங்கப்பூரில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் விபச்சாரம் என்பது அரசு அனுமதியோடு அரசல் புரசலாக நடைபெற்றாலும், 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவது இங்கு சட்டப்படி குற்றம். அந்த பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை என்பது இவர்கள் இருவருக்கும் தெரியவில்லை. இப்போது வசமாக சிக்க பாஸ்போர்ட் முடக்கப்பட்டுவிட்டது.

ஒருபக்கம் கல்யாண வேலை நெருங்கிக் கொண்டிருக்க, ‘ஊருக்கு எப்போ வர?” என்று பெற்றோர்கள், சொந்தக்காரர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், தான் வேலைப் பார்க்கும் நிறுவனத்தில் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுவிட்டது என்பதையும் சொல்லாமல் தவித்து வந்திருக்கிறார். ஏறக்குறைய நெருப்பின் மேல் நிற்கும் சூழல். குடும்பத்தாரிடம் “நான் ஒரு பெண்ணுடன் இருந்துட்டு மாட்டிக்கிட்டேன். பாஸ்போர்ட் முடக்கிட்டாங்க” என்று சொல்ல முடியுமா? அல்லது வேலைப் பார்க்கும் நிறுவனத்தில் தான், ‘என்னோட பாஸ்போர்ட்டை முடக்கிட்டாங்க-னு சொல்ல முடியுமா?

இரண்டு பக்கமும் வாயை திறக்க முடியாமல், திக்பிரம்மை பிடித்தவர் போல் மூன்றாண்டுகள் சிங்கப்பூரில் நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கலங்கிய பெற்றோர், மோகனின் நண்பர்கள் மூலம் எப்படியாவது எங்கள் மகனை ஊருக்கு அனுப்பி வைத்துவிடுங்கள் என்று கெஞ்சிப் பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருக்கும் போது, எங்கிருந்து நாட்டை விட்டு வெளியே செல்வது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

எத்தனையோ முறை பொது மன்னிப்புக்கு விண்ணப்பித்தும், மோகனுக்கு கிடைக்கவில்லை. எனினும், கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் கழித்து, பாலியலில் ஈடுபட்ட அந்த இளம் பெண், தான் 18 வயதுக்கு உட்பட்டவள் என்பதை வேண்டுமென்றே மறைத்து, ஆன்லைன் மூலம் மோகனுக்கும் அவரது நண்பருக்கும் தூது விட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இளம் பெண் வெளிநாட்டைச் சேர்ந்தவர். சிங்கப்பூரில் படிக்க வந்த இடத்தில், Pocket Money-க்காக பார்ட் டைமில் விபச்சாரம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றத்தின் பெரும் பங்கு அந்த பெண் மீது திரும்பியதால், மோகனின் பாஸ்போர்ட்டை சிங்கப்பூர் போலீசார் ரிலீஸ் செய்ய, அதன் பின் ஊருக்கு வந்து அதே பெண்ணுடன் மோகனுக்கு திருமணம் நடைபெற்றது. ஒரு அரைமணி நேர சுகத்துக்காக கிட்டத்தட்ட மூன்றாண்டு காலம் நரக வேதனையை அனுபவிக்க நேர்ந்தது.

சிங்கப்பூர் என்பது முழுக்க முழுக்க Western கலாச்சாரம் கொண்ட கட்டமைப்பாகும். இங்கு வரும் இந்தியாவைச் சேர்ந்த சில தொழிலாளர்கள், கட்டுப்பாடான குடும்ப உறவில் இருந்து வருவதால், இங்கிருக்கும் ஃப்ரீயான கலாச்சாரத்தை ஏதோ தங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது போல் எண்ணி அனுபவிக்க நினைக்கின்றனர். எந்த பிரச்சனையும் நடக்காத வரை, எல்லாமே குஷியாகத் தான் இருக்கும். ஆனால், மோகனுக்கு அரங்கேறியது போல் சிக்கினால், சிங்கப்பூரில் நிச்சயம் நரக வேதனையைத் தான் அனுபவிக்க நேரிடும்.

ஆன்லைனில் மூலம் எளிதில் எந்தவொரு பெண்ணையும் இங்கு டேட்டிங் அழைத்துச் செல்ல முடியும். உல்லாசமாக இருக்க முடியும். அதற்கான கதவுகள் இங்கு சட்டப்பூர்வ அனுமதியுடன் கிடைக்கிறது. ஆனால், அதையும் மீறி கட்டுக்கோப்பாக இருந்து, குடும்பத்தை நினைத்து உழைப்பவர்களே இங்கு ஜெயிக்கின்றனர்.

Related posts