சிங்கப்பூர் TOTO Drawவின் அடுத்த குலுக்கல் நாளை 28.07.2022 வியாழன் அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. சிங்கப்பூர் Pools நிலையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று தங்களுக்கான அதிர்ஷ்ட எண்களை வாங்கி செல்கின்றனர்.
வாரம்தோறும் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் TOTO Draw நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஜூலை 2022 அன்று நடந்த Drawவில் $1,194,850 என்ற குரூப் 1 பரிசை ஒரே ஒரு அதிர்ஷ்டசாலி தட்டிச்சென்றுள்ளார்.
பொதுவாக முதலாம் பரிசு என்பது இருவரால் அடிக்கடி பகிரப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரே ஒரு அதிர்ஷ்டசாலி அந்த பரிசை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இரண்டாம் பரிசான $2,51,548 என்ற தொகையையும் ஒரே ஒரு வென்று அசத்தியுள்ளார். TOTOவில் மொத்தம் 7 வகை பரிசுகள் உள்ளன. S$10,00,000 முதல் S$10 வரை மக்கள் ஜெயிக்க வாய்ப்பும் உள்ளது. சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகின்றனர் தொழிலாளர்கள் பலர் இந்த குலுக்கல் லாட்டரி சீட்டில் பங்கேற்று வெற்றியும் கண்டுள்ளார்.
ஆனால் இதில் ஜெயிப்பது என்பது முழுவதும் அதிர்ஷ்டத்தை நம்பி மட்டுமே உள்ளது என்பதால் லாட்டரி வாங்குவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளாமல் பொழுதுபோக்காக அவ்வப்போது மட்டுமே விளையாட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.