சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக மீண்டும் தொற்றின் அளவு என்பது சற்று உயர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அண்மையில் விஸ்வரூபம் எடுத்த KTV குழும கிளஸ்ட்டர் பெரிய அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் நாட்டில் மீண்டும் பல நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சிங்கப்பூரிலுள்ள உணவு பானம் வர்த்தகங்களாக செயல்பட்டு வருகின்ற இரவு நேர கேளிக்கை விடுதிகள் அனைத்தும் இன்று தொடங்கி இந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி வரை இரு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது.
சிங்கப்பூரில் இசைக் கூடங்கள் மற்றும் இரவு நேர கேளிக்கை விடுதிகள் போன்றவை இந்த பெருந்தொற்று சூழலில் உணவு மற்றும் பானக்கடைகளாக செயல்பட்டு வருவது நினைவுகூரத்தக்கது. மேலும் உட்புற நிகழ்வுகளில் முகக்கவசம் அணிந்து 5 பேர் வரை உடற்பயிற்சி செய்யலாம் என்று அளிக்கப்பட்ட நிலையில் தள்ள வரும்போது மீண்டும் திரும்பப் பெறப்பட்டு இரண்டுபேர் மட்டுமே உட்புறத்தில் குழுவாக உடற்பயிற்சி அது திரும்ப பெறப்பட்டுள்ளது.
உட்புற நிகழ்வுகளில் முகக்கவசம் அணிந்து 2 பேர் வரை உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பட்சத்தில் 5 பேர் வரை குழுவாக பயிற்சி செய்யலாம். மேலும் உட்புற கல்வி சேவையில் 5பேர் கொண்ட குழுவாக 30 பேர் வரை மட்டுமே கூடலாம்.
நாட்டில் மீண்டும் கொரோனா தலைதூக்கியுள்ளதால் பல முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.